Load Image
dinamalar telegram
Advertisement

எல்லோரும் ஒன்னாவோம்: பன்னீர்செல்வம் அழைப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அதிமுக.,வில் அவர்கள் தரப்பு, எங்கள் தரப்ப என்ற பாகுபாடு இல்லை எனக்கூறிய ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக.,வை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக.,வை உருவாக்கினார் ஜெயலலிதா. இந்த தீர்ப்பு கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேறியுள்ளது.

அதிமுக.,வில் சர்வாதிகாரம் நடக்காது; அரவணைத்து செல்வது தான் பண்பு. அதிமுக.,வின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை, அதிமுக ஒரே இயக்கம் தான். தொண்டர்கள் எனக்கு அளித்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ப அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Tamil News
Tamil News
Latest Tamil News

அறிக்கை:சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றங்களை நம்பினேன். தொண்டர்களை நம்பினேன். தமிழக மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல. அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் தொண்டர்களும், பொது மக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கட்சியின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடை போடும் என்பது திண்ணம். ஜெயலலிதா தான் நமது நிரந்தர பொதுச்செயலாளர் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (35)

 • பேசும் தமிழன் -

  ஒருவேளை... திமுக தலைவரை அழைத்து இருப்பாரோ????

 • ராஜா -

  திமுகவுக்கும் சேர்த்தா பண்ணீரு? மவன விட்டு சுடலய பார்க்கும் போதே அம்மா கண்டி இருந்திருந்தா இந்நேரம் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும்.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  திரு பன்னிரு அவர்களே உங்களை தூற்றியவர்கள் எல்லாரும் வாழை ஓட்ட நறுக்கி சுண்ணாம்பு தடவி விட்டார் நீதி அரசர். வாழ்க. மேலும் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் மிகவும் சிறப்பானது. போனவர்கள் மனம் திருந்தி வருவார்கள். அதில் முக்கியமாக சண்முகம் ஜெயக்குமார் கடம்பூர் ராஜு வளர்மதி கோகுல இந்திரா இன்னும் பாத்து பேர்கள் இருக்கிறார்கள் அவர்களை மட்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம். திரும்பவு ஏதாவது திட்ட துடன் வருவார்கள். இந்த குள்ளநரி கூட்டம் எதையும் செய்யும். . அவர்கள் மேல் முறையீடு செய்தாலும் ஜெயிக்க முடியாது. எம்.ஜி.ஆர் மாளிகை சாவி மீண்டும் உங்கள் கைக்கு வரும்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  அதிமுக ஒரு டம்மி கட்சி என்றால் இன்று முழுவதும் திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு என்ன வேலை இங்கே .அதிமுகவை கண்டு கொலை நடுங்கும் திமுகவினர் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்