Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை நகர பா.ஜ., தலைவர் பதவியை பிடிக்க மோதும் தலைகள்

Tamil News
ADVERTISEMENT
மதுரை : மதுரை நகர பா.ஜ., தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகளிடையே போட்டி எழுந்துள்ளது.

மதுரை நகர பா.ஜ., தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நகர பொறுப்பாளராக மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை பிடிக்க ஏராளமான நிர்வாகிகள் முட்டி மோதுகின்றனர்.

மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், கட்சியில் புதுரத்தம் பாய்ச்சும் வகையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காமல் மதுரை தி.மு.க.,வில் அதிருப்தியாளராக இருந்த டாக்டர் சரவணன், தேர்தலின்போது வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நகர தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை வந்தபோது விமான நிலையத்தில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட பின், திடீர் திருப்பமாக பா.ஜ., நகர தலைவர் சரவணன் தி.மு.க.,வில் சரண்டர் ஆனார்.இதனால் ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கு தலைவரை நியமிக்க மாநில நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்பதவிக்கு பொருத்தமானவரை தேடும் படலம் நடக்கிறது.Latest Tamil News
இந்நிலையில் கட்சியில் முன்னாள் நகர தலைவர்கள் கே.கே. சீனிவாசன், சசிராமன், மண்டல பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், துணைத் தலைவர் ஜெயவேல், மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, நிர்வாகிகள் சிவபிரபாகர், ரவிபாலா, ராஜரத்தினம், ராஜா உட்பட பலர் தலைவர் பதவிக்கு குறிவைத்துள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கட்சியில் பல ஆண்டுகளாக பொறுப்பில் உள்ளவர்கள் என்றால் சரவணன் மாதிரி கட்சி பொறுப்பில் இருந்துவிலகி இருக்க மாட்டார்கள். பிற கட்சியில் இருந்து வந்தவர்களே இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கிவிடுகின்றனர். சித்தாந்தத்தை கடைபிடிப்போருக்கும், செலவு செய்து பொறுப்பை பெறுவோருக்கும் உள்ள வேறுபாடு இது.சித்தாந்தத்தை கடைபிடிப்போரிடம் வசதியில்லை.

வசதி உள்ளோரிடம் சித்தாந்த எண்ணமில்லை. இதனால்தான் ஆட்களை தேர்வு செய்து நியமிக்க தாமதமாகிறது. இதனால் பாதிப்பு இருக்காது. மாநில தலைவராக இருந்த தமிழிசைக்குப் பின் ஆறுமாதங்கள் அப்பதவி காலியாகத்தானே இருந்தது, என்றனர்.


வாசகர் கருத்து (13)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    பச்சோந்திக்கரர் ஒரு எடுத்துக்காட்டு....

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    ///

  • shan - sydney,ஆஸ்திரேலியா

    மஹாலக்ஷ்மி பொருத்தமானவர்

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    கட்சியில் இல்லாத சரவணனுக்கு MLA ஸீட் கொடுத்திர்கள், நீங்கள் சீட் கொடுத்தபிறகு தான் கட்சியில் சேர்ந்தார். இபோதும் கட்சியை விட்டு ராஜினாமா செய்து விட்டு போனவரை, கட்சியில் இல்லாத சரவனணைத்தான் கட்சியை விட்டு நிக்கி இருக்கிறீர்கள்

  • duruvasar - indraprastham,இந்தியா

    இப்படி போட்டி மோதல் என ஏதாவது கொளுத்தி போட்டாதான் உடன்பிறப்புகள் கொஞ்சம் குசியா இருப்பாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்