Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள்; கலவரத்தை தடுக்க கிளை சிறைகளில் அடைப்பு

Tamil News
ADVERTISEMENT
மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கலவரம் போன்ற பிரச்னைகளை தவிர்க்க புதிய கைதிகள் கிளை சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இச்சிறையில் நிர்ணயிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 1250. ஆனால் 1800 பேர் உள்ளனர். தினமும் குறைந்தது 30 பேராவது விசாரணை கைதிகளாக வருகின்றனர். இடநெருக்கடியான சூழலில் கைதிகள் அடைக்கப்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிதாக வரும் விசாரணை கைதிகளை மேலுார், திருமங்கலம் உள்ளிட்ட கிளை சிறைகளில் 'ரிமாண்ட்' செய்ய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிளை சிறைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கைதிகள் உள்ளதாலும், முழுமையாக சிறைகள் இயங்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறை காவலர்கள் கூறியதாவது: மத்திய சிறைக்குள் பல தரப்பையும் சேர்ந்த கைதிகள் உள்ளதால் எந்நேரமும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டே கைதிகள் கிளை சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கின்போது, நோய் தொற்று பரவாமல் இருக்க கிளை சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டு வந்தனர். 15 நாட்களுக்கு பிறகு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதன்மூலம் நோய் தொற்றும், சிறைக்குள் தேவையில்லாத பிரச்னைகளும் தடுக்கப்பட்டன. அதன்அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
Latest Tamil News போலீசார் கூறியதாவது: கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு அழைத்து வர ஒருநாளாகிவிடும். கிளை சிறைகளில் இருந்து அழைத்துச்சென்று மீண்டும் அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. உதாரணமாக நகர் ஸ்டேஷன் வழக்கில் சம்பந்தப்பட்ட கைதியை மேலுார் கிளை சிறைக்கு சென்று அழைத்து வர வேண்டும்.

மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் மேலுாருக்கு சென்று கைதியை அடைக்க வேண்டும். பிறகு வீடு திரும்ப மீண்டும் நகருக்குள் வரவேண்டும். சிறை அதிகாரிகள் தங்கள் வசதியை மட்டுமே பார்க்கிறார்கள். எங்கள் சூழ்நிலையும் கருத்திற்கொண்டு கமிஷனர் செந்தில்குமார் சிறை நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.


வாசகர் கருத்து (2)

  • duruvasar - indraprastham,இந்தியா

    திமுக சமீபத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியதா? எதிர் கட்சிகாரங்களைதான் அடைகிறார்கள்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் கலவரத்தை தடுக்க கிளை சிறைகளில் அடைப்பு. ஹி...ஹி...ஹி...திருட்டு திமுக ஆட்சி என்றாலே குற்றவாளிகள் அதிகம் இருப்பார்கள் என்று தெரிய வேண்டாமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்