Load Image
dinamalar telegram
Advertisement

சம்பா சிவப்பு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

Tamil News
ADVERTISEMENT
விருதுநகர் : விருதுநகர் சம்பா சிவப்பு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என விவசாயிகள், வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலக மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் பாரம்பரிய ரகமான சம்பா சிவப்பு மிளகாய் அதன் காரத்தினால் சிறப்பு தன்மையை பெற்றது. தமிழக வேளாண் விற்பனை வாரியம், நபார்டு வங்கி, அக்ரி இன்குபேஷன் போரம் இணைந்து சிறப்பு பயிர்களுக்கு குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.Latest Tamil News
இந்தாண்டில் பாரம்பரிய 10 பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் விருதுநகர் சம்பா சிவப்பு மிளகாய், தென்காசி மாவட்டம் கடையத்தில் பாரம்பரிய சுவை, அதிக பழச்சாறு, சந்தை மதிப்பு மிக்க எலுமிச்சை, சமைத்தால் மல்லிகை போல் வெண்மையாக காணப்படும் பாரம்பரிய துாய மல்லி அரிசி, மதுரை சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி முந்திரி, பலாப்பழம் போன்றவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எங்கள் விளாத்திகுளம் தாலுகா கரிசல் பகுதியில் விளையும் சம்பா மிளகாய்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்