சென்னை பெரம்பூர், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில் வகையில், தற்போது 3வது ரயில் தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த ரயிலை, தமிழகத்தில் ஏதாவது ஒரு முக்கியமான வழித்தடத்தில் இயக்க, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, பயணியர் தேவை அதிகமாக இருக்கும் சென்னை - திருநெல்வேலி அல்லது சென்னை - கோவை போன்ற தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவை துவங்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஆம்னி' பஸ் கட்டண கொள்ளையில் இருந்து பயணியர் தப்பித்து, ரயிலில் ஓரளவுக்கு நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் செல்ல, வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை தயாரிப்பதில், ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டின் பெரும்பாலான ரயில் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தென் மாவட்டங்களுக்கான ரயில் பாதையில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஆனால், 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் இயக்க, ரயில் பாதையின் தரம் முக்கியமானது.
புதிய வந்தே பாரத் ரயில், விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ரயில், தமிழகத்தில் இயக்குவது குறித்து, ரயில்வே வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்.ஆனால், சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி தடத்தில் இந்த ரயில் இயக்கும் வகையில், ரயில் பாதைகள் தயாராக இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (9)
வருமானத்துக்கு மட்டுமே தென்னக இரயில்வே வேண்டும், மற்றபடி இரயில்வே வசதிகள் எல்லாம் வட இந்தியாவுக்கு மட்டுமே கிடைக்கும். அதுதானே நம் மத்திய பாஜக அரசின் கொள்கை.
வேண்டாங்க. வேண்டாம். இந்தி எதிர்ப்பு போராட்டம் -னு ஆசை ஆசையாய் கல்லெறிஞ்சு தீ வெச்சு புது ரயிலை அழிச்சு வீரம் காட்ட பெரியார் மண்ணு எப்பவுமே தயார். எங்களுக்கு ஓட்டை உடைசல் ரயில்கள் போதும்.
போங்கடா நீங்களும் உங்க குடியாட்சியும்.
இப்போ ஒன்னும் இங்க தேர்தல் வரலே நாலு மாதத்துல குஜராத் தேர்தல் வருது அதுக்குள்ளே அங்க இந்த கிளுகிளுப்பய காட்டி ஒட்டு வாங்கணுமே சென்னை மைசூரு ஷதாப்திய வந்தே பாரத்தா மாத்தினா கட்டணக் கொள்ளையடிக்கலாம் அப்டியே பிஜேபி ஆளும்கர்நாடகாவுக்கும் செய்த மாதிரியாகும்
0 ..........