57 இடங்களில் விநாயகர் சிலை புதிய பாதையில் திண்டுக்கல் காங்.,
திண்டுக்கல்:''திண்டுக்கல்லில் காங்,.சார்பில் 57 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என '' மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் கூறினார்.
அவர் கூறியதாவது: மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கலில் 57 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்துள்ளோம். அனுமதி கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் மச்சக்காளை தலைமையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி தராவிட்டாலும் தடையை மீறி சிலைகளை வைப்போம். களிமண்ணால் செய்த சிலையை வைத்து வழிபாடு நடத்தி காலணிகள் அணியாமல் ஊர்வலம் நடத்துவோம், என்றார். மண்டல தலைவர் கார்த்திக், நிர்வாகிகள் முகமது சித்திக், முகமது அலியார், நிக்கலோஸ் உடன் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!