சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:காமுகன் கைது
சோழவரம்:சோழவரம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 'காமுகனை' போலீசார் கைது செய்தனர்.
சோழவரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது, வீட்டின் அருகில் வசித்து வரும், ராஜா, 34, என்பவன், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றான்.பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.
அப்போது, ராஜா வீட்டில் இருந்து, சிறுமி அழுதபடியே வெளியே ஓடி வருவதை கண்டனர். ராஜா, சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இது குறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரையடுத்து, சோழவரம் போலீசார், ராஜாவை கைது செய்தனர். அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!