Load Image
dinamalar telegram
Advertisement

அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் டிசம்பரில் வெள்ளோட்டம்:தலைமை பொறியாளர் தகவல்

அவிநாசி:'அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், வரும் டிச., மாதம் வெள்ளோட்டம் பார்க்கப்படும்' என, திட்டத்தின் தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

அத்திக்கடவு -- அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், 'அத்திக்கடவு திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினார்.மனுவின் அடிப்படையில், கோவை மண்டல, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி அளித்துள்ள விளக்கம்:

அத்திக்கடவு - -அவிநாசி திட்டத்தை நீரேற்ற முறையில் செயல்படுத்த, 1,652 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின், 1,756.88 கோடி ரூபாய்க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.திட்டத்துக்கு, 2019 பிப்., 28ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, பிரதான பணிகள், 2019 டிச., 25ம் தேதி துவங்கியது. தற்போது வரை, 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றால், 2020 - 21ல் திட்ட செயலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டு, தற்போது திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.திட்டத்துக்கு இதுவரை, 1571.57 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வரும் டிச., மாதத்துக்குள் பணி முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு, இழப்பீடு தொகை வழங்க, அரசிடமிருந்து அரசாணை எதிர்பார்க்கப்படுகிறது.அரசாணை பெறப்பட்டவுடன், இழப்பீடு தொகை, நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement