மொபைல் போன் திருடிய 2 பேர் கைது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டைக்கு வந்த ரயில் பயணிகளிடம் மொபைல் போன் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னக்கோட்டியூரை சேர்ந்தவர் ராஜேஷ், 32. விவசாயி. வேலுார் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 52. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு வேலுார் மாவட்டம், காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு, பெங்களூருக்கு செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தனர்.
இந்த ரயில் இன்று அதிகாலை 1:30 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலில் இருந்து இவர்கள் இறங்கிய போது இரண்டு பேர் அவர்களது மொபைல் போனை பறித்துச்சென்றனர். அதை பார்த்த பயணிகள் விரட்டிச் சென்று அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பல்லபள்ளியை சேர்ந்த கோவிந்தன், 27, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பன்னிர்செல்வம் நகரை சேர்ந்த நவீன்குமார், 21, என்பதும், மொபைல் போன் திருடர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!