Load Image
dinamalar telegram
Advertisement

பீஹாரில் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம்: 31 பேர் பதவியேற்பு

Tamil News
ADVERTISEMENT
பாட்னா: பீஹாரில் நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. லாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ள நிலையில், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பா.ஜ., உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.Latest Tamil News
இந்நிலையில், மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும், காங்கிரஸ் சார்பில் 2, ஜித்தன்ராம் மஞ்சி கட்சி மற்றும் சுயேச்சை சார்பில் தலா ஒருவர் பதவியேற்று கொண்டனர்.
Latest Tamil Newsலாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ள நிலையில், அவரது மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவும் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஐக்கிய ஜனதா தளத்தின் அலோக் மேதா, சுரேந்திர பிரசாதய யாதவ், ராமனந்த் யாதவ், குமார் சர்வஜீத், சமீர் குமார் மகாசேத் மற்றும் லலித் யாதவ் உள்ளிட்ட 16 பேர் பதவியேற்று கொண்டனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அசோக் சவுத்ரி லேஷி சிங், விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் ஜா, ஷீலா குமாரி, சுனில் குமார் மதன் சஹ்னி மற்றும் பிஜேந்திர யாதவ் உள்ளிட்ட 11 பேர் பதவியேற்றனர்.

காங்கிரசின் அபிக் ஆலம், முராரி லால் கவுதம், மஞ்சி கட்சியின் சந்தோஷ்சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமாரும் பதவியேற்று கொண்டனர்.

இலாகா ஒதுக்கீடுஅமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதல்வர் நிதிஷ்குமாரிடம் உள்துறை
துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் சுகாதாரம், சாலை கட்டமைப்பு, நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை
இவரின் சகோதரர் தேஜ் பிரதாப்பிடம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையும்

விஜய் குமார் சவுத்ரியிடம் நிதி, வணிகவரித்துறை, பார்லிமென்டரி விவகாரம்

பிஜேந்திர யாதவிடம் மின்சாரம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  சுயநலத்துக்காக இப்படி கடைசி நேரத்தில் கட்சிதாவும் நிதிஷ் குமார் போன்ற அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு, அடுத்த தேர்தல் வரும்போது அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். அவர்கள் இப்படி செய்து பிழைப்பதற்கு பதில், யாசகம் செய்து பிழைக்கலாம். அது எவ்வளவோ கெளரவம். நிதிஷ், சீ, நீ ஒரு கேடுகெட்ட ஜென்மமடா...

  • Boopathi Subramanian - ,

   6220243

 • sankaseshan - mumbai,இந்தியா

  மகா கட்பந்தனின் மகா கூட்டுக்கொள்ளை ஆரம்பம் லாலு போன்ற குற்றவாளிகள் வழி காட்டுவார்கள்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அன்று பரங்கித்தலையன் கொள்ளை அடிக்கிறான் என்று எதிரகோஷம் இட்டார்கள், இன்று ..? அன்று அந்நியன் கொள்ளை அடித்தான் இன்று ..? அன்றும் மக்கள் அந்நியனுக்கு அடிமை, இன்றும் மக்கள் ...? ஆங்காங்கு எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் தான் வாழ தன இனத்தை அழித்து அரியணை ஏறுவதிலேயே கவனம் செலுத்தும் மன்னர்கள் முறை தேவையா? பொருளாதார மற்றும் நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடவேண்டிய மக்கள் திறன் இது போன்றவர்களுக்கு கூஜா தூக்க செல்வது ஆரோக்கியமானதா ?? ஒன்றுமே கூற முடியாத அளவுக்கு இருக்கிறியாது. சுதந்திரம் கிடைத்தது இவர்களுக்கு . மக்களுக்கு ? வந்தே மாதரம்

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  உருப்பட்டுடும் பா.ஜ தயவில் ஜெயித்து விட்டு இப்போ இப்படி-வெட்கம் கெட்ட கூட்டம்.

 • SUBBU,MADURAI -

  இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்ற பாட்டுதான் நம் நினைவிற்கு வருகிறது.இப்போதைக்கு இவர்கள் மஹாகட்பந்தன் என்கிற கூட்டணியில் இணைந்து கொண்டு நிதிஷ்குமாரை முதல்வராக ஆக்கினாலும் இவர்களின் எதிர்கால திட்டம் என்னவென்றால் 2024 பாரளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருக்கும் பாஜக அல்லாத திமுக,சிவசேனா,தெலுங்கானா கட்சி,சரத்பவார் கட்சி,மம்தா கட்சி,முலாயம் கட்சி,தேவேகவடா போன்ற கட்சிகளின் துணையுடன் அனைத்து எதிர்கட்சிகளின் சார்பாக நிதிஷ்குமாரை மோடிக்கு எதிராக பிரதம வேட்பாளராக நிறுத்துவதுதான்.ஆனால் பாவம் அவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை,இப்படித்தான் சும்மா கிடந்த முதியவரான யஸ்வந்த் சின்ஹாவை வாய்யா ஒன்னைய ஜனாதிபதி ஆக்குறோம்னு சொல்லி இழுத்துட்டு வந்து நடுத்தெருவுல விட்டுட்டு போய்ட்டானுக.அதே மாதிரி இந்த துரோகியான நிதிஷ்குமாரையும் பிரதமராக்குறோம்னு சொல்லி தெருவுல இழுத்து விட்டுட்டு போக போறானுங்க.அத்துடன் இந்த துரோகியான நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும்.

Advertisement