கொடியேற்ற அனுமதிக்கலே ஆத்தூர் எம்.எல்.ஏ., குமுறல்
ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு பள்ளி, கல்லுாரிகளில் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இன்று (நேற்று) சுதந்திர தினத்தில், பள்ளி தலைமை ஆசிரியரை வைத்து தேசியக் கொடியேற்ற வேண்டும். எம்.எல்.ஏ.,க்களை அனுமதிக்க வேண்டாம் என, சேலம் கல்வித்துறை அதிகாரிகள், வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், தலைமை ஆசிரியர் கொடியேற்றவில்லை; பி.டி.ஏ., தலைவர்களும், தி.மு.க., ஒன்றிய செயலர்களும் தான் கொடியேற்றியுள்ளனர். இதுப்பற்றி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலட்சியமாக கூறினர். ஏத்தாப்பூரில் பேரூராட்சி தலைவர், ஐந்து பள்ளிகளில் கொடியேற்றுகிறார். இதற்காக, பள்ளிகளில் மாணவர்கள் நீண்ட நேரம் காத்து கிடந்துள்ளனர். தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்காதது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!