Load Image
dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்

Tamil News
ADVERTISEMENT


விருதுநகர்--விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கொடி ஏற்றி போலீசார், தீயணைப்பு துறையினர், மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 179 அரசு பணியாளர்களுக்கு நற்சான்றுகளை கலெக்டர் வழங்கினார். எம்.பி., மாணிக்கம் தாகூர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு அளித்த 8 துணை கலெக்டர்களுக்கு பாராட்டு சான்றுகளையும், அயன்கரிசல்குளம், நாரணாபுரம், பாலவநத்தம், பிசிண்டி ஆகிய 4 ஊராட்சி தலைவர்களுக்கு சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருதுகளையும், 7 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றுகளும், அரசின் கட்டமைப்புக்காக பங்களிப்பை அளித்த 8 தனியார் நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 53 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் துறையின் முலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், 2018ல் படைவீரர் கொடி நாள் அதிக வசூல் புரிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், தலைமை செயலாளர் பதக்கம், துணை கலெக்டர் முத்திரை திருவாசகத்திற்கு 25 ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான சான்றும் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி, சிவகாசி சப் கலெக்டர் பிரதிவிராஜ், ஆர்.டி.ஓ.,க்கள் டி.எஸ்.பி.,க்கள், தாசில்தார்கள் உட்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.* விருதுநகர் தினமலர் நகரில் உள்ள தினமலர் கிளை அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.* விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டீன் சங்குமணி கொடி ஏற்றி பேசினார். மருத்துவக்கண்காணிப்பாளர் முருகேசன், துணை கண்காணிப்பாளர் அன்புவேல், உறைவிட மருத்துவ அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.* எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மனோகர் கொடி ஏற்றினார். போலீசார் பங்கேற்றனர். ஊரக போலீஸ்சில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கொடி ஏற்றினார்.* விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் கமிஷனர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.* விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போத்திராஜ், சாந்தி பங்கேற்றனர்.* விருதுநகர் முத்தமிழ் காலனியில் குடியிருப்போர் சங்க தலைவர் செல்வராஜன் கொடியேற்றினார்.* ம.நீ.ம., மத்திய அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கொடி ஏற்றினார். குழந்தைகள் மாறுவேட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.* புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் குணம் தலைமை வகித்தார். வி.வி.ஆர்.,சிலையில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வரை மது ஒழிப்பு ஊர்வலம் நடந்தது.* விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதல்வர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி போர்டு உறுப்பினர் ராஜமோகன், பொருளாளர் சக்திபாபு பேசினர். கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன் கொடி ஏற்றினார். சங்கங்கள், துறைகளின் அணிவகுப்பு நடந்தன. மரக்கன்றுகள் நடப்பட்டன.* வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் கல்லுாரி செயலாளர் கோவிந்தராஜபெருமாள், கூட்டு செயலாளர் லதா கலந்து கொண்டனர். முதல்வர் மீனாராணி வரவேற்றார். கணினி துறை தலைவர் கார்த்திகை லட்சுமி பேசினார். உதவி பேராசிரியர் அனிதா நன்றி கூறினார்.* கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் ஷத்திரிய வித்யாசாலா மானேஜிங் போர்டு தலைவர் குணசேகரன், தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தார். ஷத்திரியா மானேஜிங் போர்டு உறுப்பினர் பரணீதரன் இனிப்பு வழங்கினார்.* கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் தொழிலதிபர் மாணிக்கவேல் கொடி ஏற்றினார். தொழிலதிபர் அணில் சுக்ரேஸ் இனிப்பு வழங்கினார்.* திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு பொருளாளர் முருகேசன் கொடி ஏற்றினார். தொழிலதிபர் நாகேந்திரன் இனிப்பு வழங்கினார்.* கே.காமராஜ் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு உறுப்பினர் கண்ணபிரான் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.* சுப்பிரமணிய வித்தியாசாலா ஆரம்ப பள்ளியில் ஷத்திரிய வித்தியாசாலா மானேஜிங் போர்டு உறுப்பினர் ரெங்கசாமி கொடி ஏற்றினார். தொழிலதிபர் கார்த்திகேயன் இனிப்பு வழங்கினார்.* சரஸ்வதி வித்தியாசாலா ஆரம்ப பள்ளியில் கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு உப தலைவர் சிவானந்தம் கொடி ஏற்றினார். தொழிலதிபர் ரவீந்திரன் இனிப்பு வழங்கினார்.* கி.பெ.பெரிய கருப்ப நாடார் ஆரம்ப பள்ளியில் கே.வி.எஸ். மானேஜிங் போர்டு செயலாளர் ராஜா கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.* கே.வி.எஸ்., நுாற்றாண்டு பள்ளியில் ஷத்திரிய வித்தியாசாலா மானேஜிங் போர்டு இணை செயலாளர் பாலாஜி கொடி ஏற்றினார். தொழிலதிபர் ராஜ்மோகன் இனிப்பு வழங்கினார்* நோபிள் கல்வி குழுமத்தில் பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். நிர்வாக அலுவலர் செல்வி உதயகுமாரி, துணை முதல்வர் பழனிக்குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குரு உடனிருந்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பேச்சு போட்டி நட்த்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.* ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் அபிநயா, பகஸினா மஹமுதா, சரண்யா கொடியை ஏற்றினார். மாணவி அனீஸ் பாத்திமா பேசினார். பள்ளி தாளாளர் ஜனாப் என்.சிக்கந்தர் ஹயாத்கான், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியை ஜமுனாரணி, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சியில் தலைவர் சுந்தரலட்சுமி கொடியேற்றினார். கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் ராஜநந்தினி, அலுவலர்கள். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.* அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் சசிகலா கொடி ஏற்றினார். பி.டி.ஓ., சூரிய குமாரி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* ஆர் டி ஓ., அலுவலகத்தில் துணை தாசில்தார் இந்திரா கொடியேற்றினார். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சகாய ஜோஸ் கொடியேற்றினார். அலுவலர்கள் கலந்து கொண்டனர். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கிரேஸ் சோபியாபாய், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ., பேச்சிமுத்து பாண்டியன், பந்தல்குடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ., முத்துராஜ் கொடியேற்றினர்.* வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் கொடியேற்றினார். பணியாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஆய்வாளர் 75 ஆட்டோ டிரைவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். தேசப்பற்று, இயற்கை பாதுகாப்பு. சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.* அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் இளங்கோவன் கொடி ஏற்றினார். டாக்டர்கள், செவிலியர்கள், பார்மசிஸ்ட்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* வட்டார கல்வி அலுவகத்தில், வட்டார கல்வி அலுவலர் செல்வக்குமார் கொடியேற்றினார். கண்காணிப்பாளர் உதயகுமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் செயலர் டாக்டர் இளங்கோவன் கொடியேற்றினார். கல்வியியல் கல்லூரியில் செயலர் சங்கர நாராயணன் கொடியேற்றினார். கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். முதல்வர்கள் கதிர்காமு, ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.* சந்திரா நேஷனல் பள்ளியில் செயலர் சரவணன் கொடியேற்றினார். முதல்வர் பாண்டிச்செல்வி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* எஸ் பி கே., கல்லூரியில் முதல்வர் முத்துச்செல்வன் கொடியேற்றினார். துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.* தேவாங்கர் கலை கல்லூரியில் செயலர் ராமமூர்த்தி கொடியேற்றினார். முதல்வர் இசக்கிதுரை முன்னிலை வகித்தார். நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.* அருப்புக்கோட்டை அருகே ஆ. கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். மாணவர்களுக்கு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை குணவதி நன்றி கூறினார்.* அருப்புக்கோட்டை விஸ்வாஸ் கல்வி குழுமத்தின் சார்பில், பள்ளியில் செயலாளர் பழனிவேல் ராஜன் கொடியேற்றினார். பள்ளி இயக்குனர்கள் மகாலட்சுமி, தியாகேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* திருநகரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில், உறவின்முறை தலைவர் மாடசாமி, துவக்க பள்ளியில் செயலாளர் பழனிச்சாமி கொடியேற்றினர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் செந்தில் வேல்முருகன், கவிதா செய்தனர்.

திருச்சுழி
திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி செயலாளர் பெரியண்ணராஜன் கொடி ஏற்றினார். பள்ளி தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். உறவின்முறை தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தங்கராஜ் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.* திருச்சுழி கிளை நூலகத்தில் போஸ்ட் மாஸ்டர் செந்தில்குமார் கொடியேற்றினார். அஞ்சலக அலுவலர் சாரங்கபாணி, வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வீரராஜன், பாக்கியராஜ், நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் மணிமாறன் கொடியேற்றினார். ஆங்கில துறை தலைவர் திருமகள் வரவேற்றார். அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி
* காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சண்முகத்தாய் , பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் செந்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் முத்துமாரி,. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயலட்சுமி , செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் கீதா, ஸ்டேட் பேங்க் முன் வர்த்தக சங்கத் தலைவர் சந்திரசேகர், அன்னை மறுவாழ்வு இல்லத்தில் எஸ்.ஐ., அசோக் குமார் கொடியேற்றினர். மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் துளசி கொடியேற்றினார்.* காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லியாகத் அலி வழங்கினார்.

நரிக்குடி
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பஞ்சவர்ணம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், அ .முக்குளம் இந்து தொடக்கப் பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் கொடியேற்றினர்.நரிக்குடி ஒன்றிய துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி, செயல் அலுவலர்கள் ஸ்ரீ ரவிக்குமார், மல்லாங்கிணர் அன்பழகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

ராஜபாளையம்
சத்திரப்பட்டி அடுத்த ரா. ரெட்டியபட்டி ஜோதி உயர்நிலை பள்ளியில் ., ரகுராமன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பள்ளி குழு உறுப்பினர் கோபால்சாமி கொடியேற்றினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் தினகரன் சுரேஷ் தேசிய கொடி ஏற்றினர். முதல்வர் அருண் உள்ளிட்ட ஆசிரியர்கள் பேசினர்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நிறுவனர் ஆறுமுகம் கொடியேற்றினர். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* ஆறுமுகம் பழனி குரு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நிறுவனர் ஆறுமுகம் கொடியேற்றினார். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* சங்கம்பட்டி ஹரிஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் இந்திரா கொடி ஏற்றினார்.* ராஜபாளையம் ஆர்.ஐ.டி கல்லுாரி முதல்வர் கணேசன் கொடியேற்றினார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், பொது மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ராஜுக்கள் கல்லுாரியில் ரோட்டரி தலைவர் திருப்பதி செல்வன் கொடியேற்றினார். மினி மாரத்தான், பேச்சு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.* ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலை பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை விதித்தார். டி.எஸ்.பி., ப்ரீத்தி கொடியேற்றினார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம், தலைமையாசிரியர் ரமேஷ் பேசினர்.* ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆனந்தி தலைமை வகித்தார். டாக்டர் ராதா கொடியேற்றினார். ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி சுமதி பங்கேற்றார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.* ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அம்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரோகிணி தேவி தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது. கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடந்து பரிசளிக்கப்பட்டது.* சோழபுரம் பழநியப்பா மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தேசிய கொடி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். ராஜுக்கள் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சந்திர பிரபு பங்கேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருணாச்சலம், சரவண செல்வன் செல்வன்செய்தனர்.* ஸ்ரீரெங்கபாளையம் ஸ்ரீராம் காலனி குடியிருப்போர் சார்பில் ராஜு தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.* ராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப் பள்ளியில் செயலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நகராட்சி உறுப்பினர் ராதா கொடியேற்றினார். கலை நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.* நகர் காங்., சார்பில் தேசிய தலைவர்களுக்கு மாலை அணிவித்து நேரு பவனத்தில் கொடியேற்றப்பட்டது. நகர் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி முன்னிலை வைத்தார்.* வி.எச்.பி., சார்பில் தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமடங்கள் தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், மாவட்ட செயலாளர் ஆனந்த், பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திர ராஜா, ஹிந்து முன்னணி நகர் தலைவர் சஞ்சீவி பங்கேற்றனர்.* மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் கொடியேற்றினார்.* இ. கம்யூனிஸ்ட் சார்பில் செட்டியார் பட்டி மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் லிங்கம் கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.* ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பண்ணையார் ஆர்ச் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமை விகித்தார். முன்னாள் ராணுவ வீரர்கள், ராஜிக்கள் கல்லுாரி என்.சி.சி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.* சக்கராஜா கோட்டை சாவடி விளையாட்டு திடல் முன்பு தலைவர் சின்ன வெங்கட்ராஜா கொடியேற்றினார். நகராட்சி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கீதா, சங்கர் கணேஷ், கார்த்திக் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.* ராஜபாளையம் வேஸ்ட் காட்டன் அசோசியேசன் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தலைவர் ராம்குமார் ராஜா தலைமை வகித்தார் செயலாளர் கோபாலகிருஷ்ண ராஜா கொடியேற்றினார். இணை செயலாளர் முரளி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* ராஜபாளையம் ரயில் பயனாளர் அமைப்பு சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் மூவர்ண விளக்கு அமைக்கப்பட்டு ஸ்டேஷன் செயல்பாட்டு துறை மகேந்திரன் கொடி ஏற்றினார். நிலையை கண்காணிப்பாளர் ஜெயபால் தலைமை வகித்தார். ரயில் பயணாளிகள் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தனர்.* புதிய தமிழகம் சார்பில் மது, புகை, போதை இல்லா தேசம் படைப்போம் என்பதை வலியுறுத்தி டூ வீலர் வாகன பிரச்சாரம் நடந்தது.நகர செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் குருவையா, விமல்ராஜ் தலைமை வகித்தனர். பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து ராஜபாளையம் யூனியன் அலுவலகம் வரை வாகன பேரணி நடந்தது.

சிவகாசி
* காளீஸ்வரி கல்லுாரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாணவி நித்திய பிரேமா வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலைக்கழக மேலாண்மையியல் துறை உதவி பேராசிரியர் தீபா தேசிய கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தேசிய உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் தனலட்சுமி, சுபலட்சுமி தங்கச்சாமி பேசினர். மாணவி நந்தினி நன்றி கூறினார்.* பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் பணியின் அணிவகுப்பு நடந்தது. கல்லுாரி டீன் மாரிசாமி, ஐ.க்யு.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், கலை , அறிவியல் கல்லுாரி முதல்வர் சுந்தர்ராஜன், உடற் கல்வித்துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.* எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தேசியக் கொடி ஏற்றினார்.*ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகா தேவி பேசினர். இந்திய ராணுவ கேப்டன் கந்தையா, அபில்தார் குருநாதன், கேப்டன் ராமர், பாலகிருஷ்ணன், வெங்கடசாமி, நாயக், முத்துராஜ், ராணுவத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத், மகாலட்சுமி பங்கேற்றனர்.* அரிமா பள்ளியில் அரிமா சங்கத் தலைவர் வாசியப்பன் தேசியக்கொடி ஏற்றினார். தாளாளர் ரமேஷ் குமார், முதல்வர் பாண்டியன், ஆரம்பப்பள்ளி பொறுப்பாசிரியர் மெர்சி, துணை முதல்வர் சண்முகராஜா பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* முஸ்லிம் மழலையர் ஆரம்ப, மேல்நிலை பள்ளிகளில் முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் முகைதீன் அப்துல் காதர் தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.* எஸ்.எச்.என்.வி., பள்ளிகளில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியை காளீஸ்வரி பேசினார். 120 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை ஏந்தி மாணவர்கள் வலம் வந்தனர். பள்ளிகளின் தலைவர் நாகேந்திரன், செயலர் மாதவன், இயக்குனர் ஜெயகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஹரிஹர சுந்தர் பங்கேற்றனர்.* அரசு கலை , அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் காந்திமதி தேசியக்கொடி ஏற்றினார். உடற்கல்வி இயக்குனர் சாந்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணேச முருகன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகஜோதி, உப தலைவர் நாகம்மாள், மகேஸ்வரி , ஊராட்சி தலைவர் சித்ராதேவி, ஆசிரியர்கள் பூரணி, கவுசல்யா, மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.* கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மேரி தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியர் ஆனந்தவல்லி வரவேற்றார். ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தேசிய கொடி ஏற்றினார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.* நகராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் செல்வமணி தேசிய கொடி ஏற்றினார். கவுன்சிலர்கள் முரளி, அய்யாவுபாண்டியன், சிவக்குமார், மேனேஜர் பாபு, நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* நகர கூட்டுறவு வங்கியில் துணைத் தலைவர் மீரா தனலட்சுமி கொடியேற்றினார். பொது மேலாளர் கோவிந்தசாமி, வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் கொடியேற்றினார். இங்கு பணியாற்றும் முன்னாள் படை வீரர்களான வருவாய் ஆய்வாளர் பால்துரை, வி.ஏ.ஓ. ராஜேந்திரன், ஓட்டுனர் நாகராஜன், ரோட்டரி நிர்வாகிகள் சிவக்குமார், ஆனந்தகுமார், செல்வராஜ் ஆகியோர் கவுவிக்கப்பட்டனர்* மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், செயல் அலுவலர் ஜவகர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.* ஆண்டாள் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் எம்.எல்.ஏ.மான்ராஜ், துவக்கிவைத்தார். ஒன்றிய கவுன்சிலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் ஆண்டாள் சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டது.* மகரிஷி சி.பி.எஸ்.சி பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் சங்கரலிங்கம் கொடியேற்றினார். தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அலுவலர் அழகர்சாமி, முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* அரிமா சர்வதேச பள்ளியில், கிளப் தலைவர் விஜய் மெர்சன்ட் கொடியேற்றினார். தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் ஹெப்சி பாய், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* மகரிஷி மழலையர் துவக்க பள்ளியில் முதல்வர் சிவப்பிரியா கொடியேற்றினார். தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அலுவலர் அழகர்சாமி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* படிக்காசுவைதான்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி கொடியேற்றினார் ஆசிரியைகள் ரோஸ்லினாராஜ், சிவகாமி பங்கேற்றனர்.* பானாங்குளம், மல்லி, ராமச்சந்திரபுரம், பாப்பநாயக்கன்பட்டி, பெருமாள் பட்டி, இந்திரா நகர், மடவார்வளாகம், இடையன்குளம் உட்பட பல்வேறு இல்லம் தேடி கல்வி மையங்களில், அப்பகுதி தன்னார்வலர்கள் கொடியேற்றினார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.* கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் கர்னல் பாஸ்கரன் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பதிவாளர் வாசுதேவன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* மகாத்மா வித்யாலயா பள்ளியில் தாளாளர் முருகேசன் தலைமையில் முதல்வர் ராணி கொடியேற்றினார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை மாரியம்மாள் நன்றி கூறினார்* மங்காபுரம் ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் செந்தில்குமார் கொடியேற்றினார். உறவின்முறை நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement