ADVERTISEMENT
அதிகாரிகளை மிரட்டும் கவுன்சிலர்களின் கணவர்கள்!
''புரமோஷனுக்கான பணிகள் துவங்கிடுத்து ஓய்...'' என, பில்டர் காபியை பருகியபடியே பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''தமிழகத்துல, 575 சார் - பதிவாளர் ஆபீஸ்கள் இருந்தாலும், 200க்கும் மேற்பட்ட ஆபீஸ்கள்ல, முழுநேர சார் - பதிவாளர்கள் இல்லை... உதவியாளர்கள் தான், பொறுப்பு சார் - பதிவாளர்களா இருக்கா ஓய்...
''போன வருஷம், 116 உதவியாளர்களுக்கு சார் - பதிவாளர் புரமோஷன் வழங்க ஏற்பாடுகள் நடந்து, சில குளறுபடிகளால நின்னு போயிடுத்து... இப்போதைக்கு, 203 இரண்டாம் நிலை சார் - பதிவாளர் இடங்கள் காலியா இருக்கு ஓய்...
''இந்த பதவியில இருக்கிற மற்றவாளுக்கும், தகுதி அடிப்படையில முதல்நிலை சார் - பதிவாளர் புரமோஷன் குடுத்துட்டா, காலியிடங் கள் எண்ணிக்கை ஜாஸ்தியாகிடும்... அதனால, வயது, பணி மூப்பு, கல்வி தகுதி அடிப்படையில உதவியாளர்களுக்கு, புரமோஷன் பட்டியல் தயாராகிண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் இந்த மாதிரி ஒரு மேட்டர் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''உணவு துறையின் கீழ் இயங்குற தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சப்ளை செய்யுது வே... ரேஷன் கடைகளை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் நடத்துது... வாணிப கழகம், எடை குறைவா பொருட்கள் அனுப்புறதா ரேஷன் ஊழியர்கள் காலம் காலமா புகார் சொல்லுதாவ வே...
''பொதுவா, வாணிப கழகத்தின் ஒவ்வொரு மண்டலமும் டி.ஆர்.ஓ., அந்தஸ்துள்ள ஒரு முதுநிலை மேலாளரின் கட்டுப்பாட்டுல இயங்கும்... இப்ப, கூட்டுறவு துறையில பணிபுரியும் இணை பதிவாளர்கள் ஆறு பேரை, அயல்பணி அடிப்படையில, வாணிப கழக முதுநிலை மேலாளர்களா நியமிச்சிருக்காவ வே...
''புதுசா உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை ஆகிய ஆறு மா வட்டங்கள்ல, இவங்களுக்கு பணி ஒதுக்கீடு செஞ்சிருக்காவ...
''அதோட, 'எல்லாரும் புதிய பணியிடத்துல உடனே சேரணும்... மாற்று பணியிடமோ, விடுப்போ கேட்க கூடாது'ன்னு கண்டிப்பான உத்தரவும் போட்டிருக்காவ... இதனால, எடை குறைவு புகார்களுக்கு தீர்வு கிடைக்கும்னு உயர் அதிகாரிகள் நம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நகராட்சி அதிகாரி களை மிரட்டுறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தர்மபுரி நகராட்சியில மொத்தம், 33 வார்டுகள் இருக்குது... இதுல தி.மு.க., 19ம், கூட்டணி கட்சியான வி.சி., ஒரு வார்டுலயும் ஜெயிச்சிருக்குது பா... அ.தி.மு.க., 13 வார்டுகள்ல ஜெயிச்சிருக்குது... 33 வார்டுகள்ல 18ல பெண்களும், 15ல ஆண்களும் ஜெயிச்சிருக்காங்க பா...
''இதுல, சில பெண் கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்களின் மனைவி மற்றும் குடும்பத்தை சேர்ந்தவங்க... அவங்களது கணவர்கள் தான், கவுன்சிலர் பணிகளை செய்றாங்க பா...
''அதுலயும், ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் தான் அதிகம்... நகராட்சி அதிகாரிகள் துவங்கி துப்புரவு பணியாளர்கள் வரை பலரையும் கூப்பிட்டு, 'நாங்க சொல்ற வேலைகளை தான் செய்யணும்'னு மிரட்டு றாங்க... நிர்வாகத்துல இவங்க குறுக்கீடு எல்லை மீறி போயிட்டு இருக்கிறதால, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதாரங்களோட புகார் அனுப்ப, நகராட்சி ஊழியர்கள் தயாராகிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய, நண்பர்கள் கலைந்தனர்.
வாசகர் கருத்து (4)
கூட்டுறவு என்பது கூடி கொள்ளை அடிப்பவர்கள் உயர்வுக்காகவே என்ற நிலையில் கூட்டுறவு இணைப்பதிவாளர்களை நுகர்பொருள் வாணிப கழகத்தில் நியமித்தால் அங்கு அடிக்கும் கொள்ளையில் பங்கு வாங்கிக்கொண்டு கொள்ளையை அதிகமாக்கிவிடுவர்.
கவுன்சிலர்களின் கணவர்களை. ஏன் அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கிறார்கள். வெளியே விரட்ட வேண்டியதுதானே.
உள்ளாட்சித் தேர்தலில் ஐம்பது சதவீதம் பெண்கள் என்ற பீற்றலின் பின் இதுதான் நடக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நகராட்சியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றாலும் "