Load Image
dinamalar telegram
Advertisement

ஐடியா அணி உருவாக்கலாமே!

Tamil News
ADVERTISEMENT

'ஐடியா அணி உருவாக்கலாமே!'



கோவை மாவட்ட தி.மு.க., மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நிர்வாகி மாலதி தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், 'ஒரு வீட்டுக்குள் பெண்களால் மட்டுமே அடுப்பங்கரை வரை செல்ல முடியும். எங்களை, 'போர்டிகோ' அல்லது 'ஹால்' வரை தான் அனுமதிப்பாங்க. சிலர் உட்கார வைப்பாங்க; சிலர் நிக்க வச்சு பேசி அனுப்பிடுவாங்க. சிலர் தண்ணீர் கொடுப்பாங்க; சிலர் டீ கொடுப்பாங்க.
'உங்களால் மட்டுமே, 'அக்கா இன்னைக்கு என்ன சமையல்; சாம்பார் வாசம் அருமையா இருக்கு'ன்னு ஆரம்பிச்சு, மட்டன், சிக்கன்ல இருந்து, பக்கத்து வீட்டு பிரச்னை வரைக்கும் உரிமையாக பேச முடியும். யதார்த்ததை நான் சொல்கிறேன்... நீங்கள் பேசும்

வீட்டில் கல்லுாரி மாணவியர் இருந்தால், அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்' என்றார்.நிர்வாகி ஒருவர், 'பேசாம நம்ம கட்சியில் ஐடியா அணின்னு ஒண்ணு உருவாக்கி, இவர பொறுப்பாளரா போடலாம்... எவ்ளோ 'டெக்னிக்' வச்சிருக்காரு...' என, புகழ்பாடி நடையை கட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    Black ல எப்படி சம்பாதித்து கோடிஸ்வரன் ஆவது என்பதை தொண்டனுக்கு கற்றுக்கொடு."

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர் 'அடுப்படி' வரை சென்று பதவி பிடித்ததுபோல உறுப்பினரையும் சேர்க்கலாம்

Advertisement