ADVERTISEMENT
புதுடில்லி: உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும்.

உலகின் மிக உயர்ந்த போர் முனையாக கருதப்படும் இந்த சியாச்சின் பனிமலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடினர். இந்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அருமை..... தனது வீட்டில் கூட கொடியேற்ற மனமில்லாத தருதலைகள் தலைகுனியும்படியான செய்தி இது....