Load Image
dinamalar telegram
Advertisement

விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், இன்னும் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்பேன் என்றும் கூறினார்.Latest Tamil News

சுதந்திரத்திற்கு தலைவர்கள் பாடுபட்ட கடந்த கால வரலாற்றை நான் எண்ணி பார்க்கிறேன். விடுதலை போராட்டத்திற்கு எதிராக முதன் முதலாக தமிழக மன்னர்கள் தான் குரல் கொடுத்தனர். மாநிலம் முழுவதும் முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமை பெற்று தந்த மறைந்த முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்கிறேன். சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தியாகிகள், அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். சுதந்திரத்திற்கு பாடுபட்டட தமிழகத்தை சேர்ந்த பாரதியார், சுப்பிரமணி சிவா, திருவிக, சிவகங்கை பனையூரை சேர்ந்த கான்சாகிப், வரியை தர மாட்டேன் என்ற கட்டப்பொம்மன், எட்டப்பர்களை பார்த்து சிரித்தவர் அவர். மாவீரன் சுந்தரலிங்கம், வடிவு, வீரநாச்சியார், குயிலி, சின்னமருது, பெரியமருது, தீரன்சின்னமலை, அழகுமுத்துக்கோனின் வீரம், சிங்காரவேலன், பகத்சிங், தோழர் ஜீவா, கர்ம வீரர் காமராஜர், ரெட்டை மேடை சீனிவாசன், காயிதே மில்லத் முத்துராமலிங்கம், திருப்பூர் குமரன், ஆகியோரை வணங்குகிறேன்.

தியாகத்தை போற்றுவதில் திராவிட அரசு எப்போதும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலை வைத்தது எங்களின் அரசு. தியாகிகளுக்கு நினைவு மண்டபம், வாரிசுகளுக்கு வீடு, தலைவர்களுக்கு சிலை என திராவிட இயக்கம் போற்றி வருகிறது.
Tamil News
Tamil News
இந்த சுதந்திர நாளில் சுதந்திர போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கட்டபொம்மன், மருதுபாண்டி, விஜய ரகுநாத சேதுபதி வழித்தோன்றல் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 % ஆக அதிகரிக்கப்படும். இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவர்.Latest Tamil News
தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. பெண்களுக்கு இலவச பயணம், வேளாண் துறைக்கு பட்ஜெட் என பல சாதனைகள் படைத்துள்ளோம். 2 ஆயிரம் கோடிக்கு மேலான கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பலரும் பயன் பெற்றுள்ளனர். போதை பொருள் ஒழிப்பு பணி சிறப்பாக நடக்கிறது. இன்னும் தமிழக வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்பேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விருதுகள் வழங்கினார் முதல்வர்தொடர்ந்து நடந்து விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர். ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் விருது, பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆய்வு நிறுவன இயக்குனர் இஞ்ஞாசி முத்துக்கு அப்துல் கலாம் விருது, எழிலரசிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்று திறனாளி நலனுக்கு உழைத்த டாக்டர் ஜெய்கணேஷ் மூர்த்தி , சமூக சேவகர் முனைவர் பங்கஜம், பிரியா உள்ளிட்டோருக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் முதல்வர் ஸ்டாலின் , காந்தி சிலையை திறந்து வைத்தார்.வாசகர் கருத்து (39)

  • Citizen_India - Woodlands,இந்தியா

    சுயநல திமுக (திருடர் முன்னேன்ற்ற கழகம்) எந்த நோக்கத்தில் வாவுசி பெயர் புறக்கணித்தது, இந்தியாவில் வெள்ளயனுக்கு சமமாக முதல் கப்பல் ஒட்டியவர வாவுசி. வெள்ளையானால் தன வக்கீல் அந்தஸ்ட்டையும் பறிகொடுத்து பல இன்னல்களை சந்தித்த கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வாவுசி பெயர் ஏன் விடுபட்டது.

  • Gopalakrishnan S -

    விடுதலை நாள் அருங்காட்சியகத்தில் வெள்ளையனை எதிர்த்து வீரமாக போராடிய சொரியார் வரலாறு பிரபலப்படுத்தப்படும் !

  • Mohan - Thanjavur ,இந்தியா

    GoK - kovai,இந்தியா 15-ஆக்-2022 10:52 யாரு படம் வைப்பீங்க. என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. சந்தேகமே வேண்டாம். பேட்டரிவாளன் தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement