கோழிப்பண்ணை ஈ தொல்லை மக்கள் அறிவிப்பால் பரபரப்பு
மொடக்குறிச்சி அருகே கோழிப்பண்ணை ஈ தொல்லையை கண்டித்து, கறுப்பு கொடி கட்டுவதாக மக்கள் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சியை அடுத்த பூந்துறை சேமூரில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கிருந்து வரும் ஈக்கள், அருகில் உள்ள வீடுகளில் சமையல் பாத்திரங்கள், உணவுகளை மொய்க்கின்றன. இதனால் மக்கள் உணவு உண்ண முடியவில்லை. அருகில் உள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப்பண்ணை மீது நடவடிக்கை கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு
அளித்தனர்.
இந்நிலையில் கோழிப்பண்ணை மீது நடவடிக்கை கோரி, பூந்துறை சேமூரில் சுதந்திர தின நாளில், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவோம் என்று, மக்கள் நேற்று அறிவித்தனர். இதையறிந்த மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய் துறையினர் சென்றனர். அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கோழிப்பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கிராமத்தை சேர்ந்த, 11 பொது நபர், வருவாய் துறை, ஊராட்சி தலைவர், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட, 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கோழிப்பண்ணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதுவரை மக்கள் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!