Load Image
Advertisement

கொடி ஏற்ற அனுமதி மறுப்பு: மத்திய அமைச்சர் புகார்

கோல்கட்டா:தேசியக் கொடியை ஏற்ற, மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாக பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் புகார் தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்கு தெற்கு மிதுனபுரியில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில், சுதந்திர தினத்தையொட்டி நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் இங்கு தேசியக் கொடியை ஏற்றுவதாக இருந்தது. ஆனால் அங்கு சென்றபோது, அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றாமலேயே அவர் திரும்பினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றுவதற்காக சென்றேன். ஆனால் சிறார்

சீர்திருத்த இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.இதில் அங்குள்ள அதிகாரிகள் மீது எனக்கு வருத்தமில்லை. மாநில அரசின் உத்தரவை அவர்கள் செயல்படுத் தியுள்ளனர். சுதந்திர போராட்ட தியாகி களுக்கு மேற்கு வங்க அரசு தரும் மரியாதை இவ்வளவு தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Latest Tamil News

''மாநிலம் முழுதும் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. ஆனால், வீண் அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது,'' என,
திரிணமுல் காங்.,கைச் சேரந்த ராஜ்யசபா எம்.பி., சுகேந்து சேகர் ராய் பதிலடிகொடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (5)

  • duruvasar - indraprastham,இந்தியா

    கொடியேற்ற ரன் ரார்படுகள் செய்யவில்லை அல்லது அமைச்சர் பொய் சொல்லுகிறாரா என கூறாமல் அரசியல் செய்கிறார் என சொல்லுவது எந்தவிதமான பதிலடி. இதற்கு பெயர் பதிலடி இல்லை பல்டி.

  • அப்புசாமி -

    அடப்பாவமே... எங்க ஊர்ல வீட்டுக்கு ஒரு கொடி விநியோகித்து ஏற்றச் சொல்கிறார்களே... எல்லாரும் ஏற்றினார்களே... சிறார் பள்ளியில் ஏற்பாஉ பண்ணலேன்னா என்ன, இவர் ஒரு கொடியை வாங்கி ஏற்றி நாட்டுப்பற்றை காமிச்சிருக்கலாமே....

  • மதுமிதா -

    தேச துரோகம் வழக்குதொடரலாம் ஆட்சியை கலைக்கலாம்

  • Visu - chennai,இந்தியா

    மமதை தீதியின் ஆட்டம் விரைவில் முடியும்

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    அட மேற்கு வங்கமாவது ஒண்ணாவதுங்க,,,,,, அது ரெக்கார்டில் வேணா இருக்கலாம்++++ஆனால் நடைமுறையில் அது கிழக்கு பாகிஸ்தான் டூ.+++கி. பாகிஸ்தான் ஒன் தான் பக்கத்துலேயே இருக்கு.+++அங்க என்ன இந்திய கொடியயா ஏத்தறாங்க?இங்க மட்டும் ஏத்தறதுக்கு ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement