Load Image
Advertisement

இசைக்கலைஞரா நீங்கள்? உங்கள் துறையில் உச்சம்தொட இதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!

 இசைக்கலைஞரா நீங்கள்? உங்கள் துறையில் உச்சம்தொட இதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!
ADVERTISEMENT
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித இனம் நாகரிக வளர்ச்சி அடைந்துவந்த காலகட்டத்தில் மனிதர்கர்களுடன் சேர்ந்து பயணித்த பொழுதுபோக்குத் துறை என்றால் அது இசைத்துறைதான்.
உலகம் முழுக்க உள்ள பாரம்பரிய இசை வடிவங்கள் மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளைப் பறைசாற்றவே அறிமுகப்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும் மதக் கடவுளர்களைத் துதிக்கும் பாடல்களாகவே இருந்துவந்தன.

இதுதவிர கிராமிய பகுதிகளில் மனிதர்கள் தங்கள் பொழுதுபோக்குக்காக எழுத்து வடிவமற்று வாய்ப்பாட்டாகப் பாடும் ஃபோக் இசையும் உலக நாடுகளில் பிரபலமாகி வந்துள்ளது. கடந்த ஐநூறு ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர வளர மேடை நாடகம், சினிமா, கச்சேரி என இசைத்துறை புதிய உச்சத்தை எட்டி வந்தது.
Latest Tamil News
இசைத் துறை கோடிகள் புழங்கும் பெரிய தொழிலாக வளரவே, புதிய இசைக் கலைஞர்கள் உருவாகத் துவங்கினர். உலகளவில் இசைத்துறையின் சந்தை மதிப்பு பல மில்லியன் டாலர்கள் கொண்டதாக உருவெடுத்தது. இதற்கு முக்கியக் காரணம் இசை ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு அதிக பணம் செலவிடுவதுதான். இதன்காரணமாக தற்போது உலகளவில் இசைக் கலைஞர்களது எண்ணிக்கை பெருகத் துவங்கி விட்டது.

முழு நேர இசைக் கலைஞர்களாக இருந்தாலும் சரி, பகுதி நேர இசைக் கலைஞர்களாக இருந்தாலும் சரி, ஒரு இசைக் கலைஞர் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது சிம்ஃபொனி இசைக் குழுவில் பங்கேற்க ஆர்வம் காட்டுவர். அடுக்கடுக்கான இசைக் கருவிகளின் அணிவகுப்புடன் நடைபெறும் சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ரா குழுக்களுக்கு உலக நாடுகளில் இசை ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற லண்டன் சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ரா துவங்கி, சீன ஆர்கஸ்ட்ரா, இந்திய சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ராவரை உலக நாடுகளில் பல வித சிம்ஃபொனி குழுக்கள் உருவாகத் துவங்கிவிட்டன. இந்த குழுவினர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ரா கச்சேரிகளுக்கு தற்போது இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக இசைத்துறையில் இயங்கிவரும் ஓர் வாத்தியக் கலைஞரின் உச்சபட்ட ஆசையாக விளங்குவது ஓர் சிம்பொனி குழுவில் பங்குகொள்ளவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இவர்கள் சினிமா, கச்சேரி, யூடியூப், பேஸ்புக் என பல தளங்களில் தங்கள் இசைத் திறமையைக் காண்பித்துவிட்டாலும் சக கலைஞர்களுடன் இணைந்து சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ரா குழுவில் வாசிப்பதன் சுகமே ஆலாதியானது என்பதை உணர்ந்தவர்கள்.
Latest Tamil News
சிம்ஃபொனி ஆர்கஸ்ட்ராவில் அங்கம் வகிப்பதால் பெரிய பண லாபம் ஈட்ட முடியாது என்றாலும் கூட அதில் பங்குகொண்டால் ஏற்படும் மன நிறைவு மற்றும் அங்கீகாரம் இசைக் கலைஞர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். ஆனால் இந்தியாவில் வயலின், செலோ, பேஸ், டிரம்பெட், டூஃபா, டிரம்ஸ் இசைக்கும் இசைக் கலைஞர்கள் பலருக்கு இதுகுறித்த சரியான விவரங்கள் தெரியாததால் தங்கள் சிம்ஃபொனி கனவை நனவாக்க முடியாமல் தவிக்கின்றனர்.

மும்பை கலாசார குழுமம் உருவாக்கிய இந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் ஒரே சிம்பொனி குழுமம்தான் இந்திய சிம்ஃபொனி இசையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த குழுவினர் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகள் பலவற்றில் சிம்ஃபொனி கச்சேரி செய்கின்றனர். இந்த குழுவுக்கு புதிய இசைக் கலைஞரைத் தேர்வு செய்ய இவர்களது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி, இதர விவரங்களை அளித்து இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

இசைக் கலைஞர்கள் தங்கள் வாசிப்புத் திறனை வீடியோ எடுத்தும் அனுப்பலாம். திறமை, அனுபவம் கொண்ட கலைஞர்கள் நேர்காணலுக்குப் பின்னர் இக்குழுவில் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஒவ்வொரு கச்சேரிக்கும் இவர்களுக்கு உரிய சம்பளமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்திய சிம்பொனி குழுவில் வாசிப்பதால் இசைக் கலைஞர்களுக்கு உலக இசைத் துறையில் அறிமுகம் கிடைக்கும்.
இதனால் அவர்களது தொழிலில் மேலும் புதிய கதவுகள் திறக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் சிறந்த இசைக் கலைஞர் என உணர்ந்தால் இந்த குழுவில் இணைய விண்ணப்பியுங்கள்..!


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement