ADVERTISEMENT
கம்பத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் பரவி 15 ஜீப்புகள் எரிந்து சேதமாகின.
கம்பம் நந்தகோபாலன் கோயில் எதிர்புறம் உள்ள வாகன காப்பகத்தில் 64 ஜீப் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளாகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் வரிசையாக நின்றிருந்த ஜீப்புகளில், மையத்தில் நின்றிருந்த ஜீப்பில் பேட்டரிக்கு செல்லும் ஒயரில் தீ பிடித்துள்ளது. நள்ளிரவு என்பதால் யாரும் இல்லை.
ஜீப்பில் எரிந்த தீ அருகில் இருந்த மற்ற ஜீப்களையும் பற்றியது. இதில் 15 ஜீப்புகள் எரிந்தன. அதில் 9 முழுவதும் எரிந்து சேதமானது. 6 ஜீப்புகள் பாதி எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா சம்பவ இடத்தை பார்வையிட்டார். காவலாளி சவடப்பன் புகாரில் விசாரிக்கின்றனர்.கேரள பதிவெண் கொண்ட ஜீப்கள் என்பதால் இடுக்கி மாவட்ட தனிப்பிரிவு எஸ்.ஐ.சுரேந்தர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!