தேசிய தரவரிசை பட்டியலில் 63வது இடம் பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்
தேசிய தர வரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, 63ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதுகுறித்து, சேலம் பெரியார்
பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
'நாக்' ஆய்வுக்கு பின், 'ஏ++' கிரேடு வழங்கப்பட்டது. பல்கலை தொடங்கிய, 25 ஆண்டில், இந்த நிலையை பெற்றது, பல பல்கலைகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
பெரியார் பல்கலையில் ஏராளமான அடிப்படை ஆய்வுகள் நடந்துள்ளன. தரவரிசையில், ஆய்வு அடிப்படையில் முன்னணியில் உள்ளோம். 75 ஆண்டுக்கு மேலாக செயல்படும் பல்கலையை விட, பெரியார் பல்கலை முன்னணியில் உள்ளது. நான் பதவியேற்கும்போது தேசிய தரவரிசை பட்டியலில், 83ம் இடத்தில் இருந்தோம். கடந்த ஆண்டு, 73, நடப்பாண்டு, 63ம் இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்து, விண்ணப்பம் பெற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இருப்பினும் பல்கலை விதிமுறைக்கேற்ப தகுதியானவர் விண்ணப்பிக்காததால் அவற்றை நிரப்ப முடியவில்லை.
தொலை நிலைக்கல்வியில் பல பிரச்னைகள் இருந்தன. அவற்றை சரி செய்துள்ளோம். 'ஏ++' வாங்கிய முதல்தர பல்கலை என்பதால், விரைவில் தொலைநிலைக்கல்வி நடத்த, பல்கலை மானியக்குழு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு துறைகளில் ஏராளமான அடிப்படை ஆய்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, கேன்சர், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, 250 மருந்துகள் வரை கண்டுபிடித்துள்ளனர். இவற்றை அப்ளி கேஷன் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!