ADVERTISEMENT
சென்னை: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நேற்று (ஆக.,14) மதுரையில் நடந்த ராணுவ வீரர் இறுதி அஞ்சலியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.,வினர் செருப்பை வீசினர். இந்த சம்பவத்தை அடுத்து டாக்டர் சரவணன் அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரவணன் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (58)
கட்சி முக்கியமா உசுரு முக்கியமான்னு டாக்டர் யோசிச்சருப்பாரு....
தீமுக மரண பயத்தை காட்டி விட்டது.
அமைச்சர் காரில் தேசிய கொடி தான் பறக்கும்.. கட்சி கொடி இல்லை.. மற்றது உங்களுக்கே புரியும்.
அவர்கள் நீக்குவதற்கு முன்பே இவர் விலகி விட்டார்.. பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைக்க இவர்கள் நீக்குகிறார்கள். என்று தான் மதுரை மக்கள் சொல்றாங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
என் உடம்பில் திராவிட ரத்தம் தான் ஓடுகிறது என்று சொல்லும் நீ அங்கு பதவி இல்லை என்றதும் ...... இங்கு வந்தாய். இப்போது மட்டும் அங்கு போனால் என்ன மரியாதை கிடைக்கும் சொல். பி.தி.ஆர்.க்கு செருப்பு துக்க வேண்டியதுதான்.