Load Image
dinamalar telegram
Advertisement

தாயின் மணிக்கொடியை வீடுதோறும் ஏற்றுவோம்!

Tamil News
ADVERTISEMENT
உலக வரலாற்றில் நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு கொடிகள் இடம் பெற்று வந்துள்ளன. இந்திய வரலாற்றில் 'பாரத வர்ஷம்' என்று கூறப்படும் ஆன்மிக நாகரிக காலம் தொட்டு, கொடிகளை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்திய ஒரு வளமான வரலாற்றையும், பாரம்பரியத்தையும், வரலாற்றில் நம்மால் காண முடிகிறது.


'த்வஜா, அக்ரா, க்ருதத்வஜா, கேது, பிருஹத்கேது, சஹஸ்ரகேது' போன்ற பல்வேறு சொற்களால் குறிக்கப்படும் கொடிகளைப் பற்றிய ஏராளமான குறிப்புகள், வேத இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது, இது கொடிகளின் வரலாற்று துவக்கமாக நாம் காணலாம்.ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது த்வஜா என்பது கொடி, கேது என்பது நீண்ட முக்கோணக் கொடி, கிருதத்வஜா என்பது பதாகைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி, பிரத்கேது, பெயர் குறிப்பிடுவது போல, ஒரு பெரிய கொடி. சஹஸ்ரகேது ஆயிரம் கொடிகள் அல்லது ஆயிரம் எதிரிகளின் கொடிகளை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு போர்வீரன் என்று பொருள்படும்.அதர்வண வேதத்தில் சூரிய பகவானின் கொடியின் குறிப்பை காணமுடியும். முருகனை சேவற்கொடியோன் என்று கூறுவர்.
Latest Tamil News
கொடிகள் சின்னங்கள் போர்க் காலத்தில் மட்டுமல்ல... திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போதும் பயன்படுத்தப்பட்டன. நல்லிணக்க உணர்வு மற்றும் பகிர்வு கலாசாரம் ஆகியவற்றைக் குறிக்கும் இந்த கொடிகளால் தெருக்கள் மற்றும் பொது இடங்கள் விரிவாக அலங்கரிக்கப்பட்டன.ஏறத்தாழ 2000 ஆண்டு பழமையான சங்கத் தமிழ் இலக்கியம் புற நானுாறு, ஐங்குறு நுாறு, மற்றும் திருமுருகு ஆற்றுப்படைகளில் கொடிகளின் முக்கியத்துவத்தை காணலாம் சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், நம் தென்னாட்டு வேந்தர்களின் கொடி
களைக் குறிக்கிறது.

வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,மண் தலை ஏற்ற வரைக.- இப்படி சங்க இலக்கிய காலம் மற்றும் வேத காலம் தொட்டு கொடி என்பது நாட்டின் அடையாளமாகவும், வீரமாகவும், வெற்றியாகவும், அரசனின் புகழாகவும் விளங்கியதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்க்கொடிதான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து இந்தியர்களும் சகோதர சகோதரிகளாக ஒன்றாக இணைத்து, 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற வேட்கை ஆங்கிலேயர்களை ஓடச் செய்து, சுதந்திரத்திற்காக வித்திட்டது.
சும்மா கிடைத்ததா சுதந்திரம்? ஆயிரக்கணக்கான தியாகிகள் விடுதலைப் போராட்டத்தில், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர்.


சுதந்திர போராட்டத்தின் போது திருப்பூரில் நடந்த போராட்டத்தில் சுப்ரமணிய பாரதியின், 'அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே...' என வீர முழக்கமிட்டு, அப்போது தடை செய்யப்பட்டு இருந்த நம் இந்திய தேசிய கொடியையும், கரங்களில் ஏந்திய திருப்பூர் குமரன் மீது, பிரிட்டிஷ் காவலர்கள் தடி கொண்டு கடுமையாக தாக்கினர்.
திருப்பூர் குமரன் தலையில் அடிபட்டு கீழே சரிந்தார். அந்த நிலையிலும் அவர் நம் இந்திய தேசிய கொடி அவர் கரங்களில் இருந்து நழுவாமலும், தரையை தொடாமலும் காத்து நின்றார். அந்த 'கொடி காத்த குமரன்' மண்ணில் பிறந்து அவ்வழிவந்தவர்கள் தான் நாம். இங்கு பாரதியின் வரிகள் தான் என் நினைவிற்கு வருகிறது...

'காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்!'தன் சொந்தம் பந்தம் மற்றும் செல்வங்களை துச்சமென நினைத்து நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து ஆங்கிலேயனின் கொடுமைகளுக்கு ஆளாகிய பல ஆயிரம் பெயர் தெரியாத தியாகிகளால் கிடைத்தது தான் நம் நாட்டின்
சுதந்திரம். 'உலகப்போரில் போரிட்டால் நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கிறோம்' என்று கூறிய பிரிட்டிஷாரின் வார்த்தைகளால் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில், நாட்டின் சுதந்திரத்திற்காக தாமாக சென்று உலகப் போரில் பங்கு பெற்று வீரமரணமடைந்த பல லட்சம் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தால் தான் நமக்கு இந்த சுதந்திரம்
கிடைத்திருக்கிறது.


இவர்களுடைய தியாகத்தால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து, ஆகஸ்ட் 15, 1947ல் ஆங்கிலேயர்களின் தேசியக் கொடியை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.மூவர்ணக் கொடி அசைந்து ஆடுகிறது என்றால் அது வீசும் காற்றால் மட்டுமல்ல... இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு தியாகிகளின், ஒவ்வொரு ராணுவ வீரர்களின் இறுதி மூச்சுக்காற்றால் தான் என்றால் மிகையாகாது.


நாட்டிற்காக வீரமரணம் அடையும் போதும் கூட வெற்றிகொண்ட மூவர்ணக்கொடி அசைந்தாடுவதை கண்டு, ஆனந்தத்தில் தன் உயிர் நீத்த அந்த கார்கில் போர் வீரர்களை நம்மால் மறக்க முடியுமா?சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், நம் நாட்டிற்காக நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும், நம் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தில் உதித்தது, 'ஹர் கர் திரங்கா' என்ற ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி ஏற்ற வேண்டும் என்பது!ஓட்டு வங்கிக்காக ஜாதி, மதம், இனம், மொழி என்று பல பலவற்றால் நம்மை பிரித்து சகோதரத்துவத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் சீர்குலைத்த தீய சக்திகளுக்கு, இது ஒரு பாடமாக அமையட்டும். வந்தே மாதரம்... ஜெய்ஹிந்த்!

- கர்னல் தியாகராஜன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி


கவிதை


நம் வீடு நம் உணவு

நம் தேசம் நம் காற்று

ஆள்வதற்கு அடுத்தவனேன்?

தெறித்த சிந்தனையில்

உதித்து எழுந்தவள்தான்

சுதந்திரதேவி


வாசகர் கருத்து (5)

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  2024 க்கு பிறகு விடியல் வந்தால் தாயின் மணிக்கொடியை வீடுதோறும் ஏற்றுவோம்

 • Suri - Chennai,இந்தியா

  பீசப்பி கலாச்சாரம்

 • ஸ்டிக்கன் 2 - al-rayan,பஹ்ரைன்

  பாரத் மாதா கி ஜெய்

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

   வெல்க பாரத தாய் என்று தமிழிலும் எழுதலாமே

  • Suri - Chennai,இந்தியா

   காசு நீங்களா தருவீர்???? ஹி ஹி ஹி ஹி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement