Load Image
Advertisement

தி.மு.க., அமைச்சரை சந்தித்த மதுரை பா.ஜ,. தலைவர் சரவணன்

மதுரை: பா.ஜ.,வின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவருமான சரவணன் கூறினார்.

Latest Tamil News


இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மாநில நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். பா.ஜ.,வின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.,வில் இருந்து விலகுகிறேன். விலகுவதற்கான காரணம் குறித்து காலையில் பா.ஜ.,வுக்கு கடிதம் எழுத உள்ளேன். பா.ஜ., தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Latest Tamil News
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (94)

 • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  பிஜேபியிடம் (பிஜேபி அனுதாபிகளை விட) நேர்மையை, அப்பழுக்கற்ற தன்மையை எதிர்பார்க்கிறார்கள் உ.பிஸ்.... அவர்கள் திமுகவுக்காக பல விமர்சனத்துக்கு உட்பட்ட விஷயங்களில் கூட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள்.. இதை இங்கே உ.பி.ஸ் எழுதியிருக்கும் கருத்துக்கள் வாயிலாக அறியலாம்.. வேற்று முகாம்களில் இருந்து யாரை வேண்டுமானாலும் வரவேற்று சேர்த்துக்கொள்வோம் என்கிற அபத்தத்தை பிஜேபி இனியாவது கைவிட வேண்டும்.. நாம சொல்லியா கேட்கப்போகுது.. ஏழை முரசொலி மாறனுக்கு மக்கள் வரிப்பணத்தில் அமெரிக்கா அனுப்பி ட்ரீட்மெண்ட் கொடுக்க ஏற்பாடு பண்ணுன கட்சியாச்சே ......

 • duruvasar - indraprastham,இந்தியா

  பிஜேபி காரங்க எப்படி ராணுவ வீரனுக்கு அஞ்சலி செலுத்த வரலாம் என அன்பொழுக அரவணைக்கும் ஆதரவாக பேசும் தி மு கா வுக்கே திரும்பி போயிடுங்கள் ஐயா . அதுதான் நாட்டுக்கே நல்லது .

 • Balaji - Chennai,இந்தியா

  செருப்பு விட்டதுக்கே மனவுளைச்சலா? அடப்பாவமே.. அப்பாவி போல இவர். கல்லு விட்டு ரத்தம் வரவெச்சி வந்த ரத்தத்துக்கு விண்ணான அறிவுஜீவி கிளீனர் சொல்லிய அருவருப்பான விளக்கங்களெல்லாம் இவர் கேள்வி பட்டதில்லை போலும். தெய்வமே..

 • Tamil - Trichy,இந்தியா

  பி ஜெ பி ல இருக்ரதே நாலு ஐந்து பெரு. அதுலயும் வொன்னு போச்சா. அப்போ ஆண்டத கிடா குமாரு, டுமீல் குப்பம் வௌவாலு வந்து சேந்துக்குங்கப்பா.

 • கே.சுரேந்திரன் - Udaipur,இந்தியா

  இவரைப்போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement