Load Image
dinamalar telegram
Advertisement

அவங்க ஏன் ராஜினாமா செய்யணும்!

Tamil News
ADVERTISEMENT

'அவங்க ஏன் ராஜினாமா செய்யணும்!'



அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட, திருநெல்வேலி நகர் மாவட்ட செயலர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலர் சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலர் கணபதி உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட கட்சியினர், தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டி பண்ணை வீட்டில், பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.அவர்கள் கூறுகையில், 'அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2026 வரை பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர். இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தொண்டர்களை குழப்பி வருகிறார். பழனிசாமி, கே.பி.முனுசாமி யாராவது ஒருவர் ராஜினாமா செய்து, இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் சின்னம், கட்சி யாரிடம் உள்ளது என்பது தெரிய வரும்' என்றனர்.நிருபர் ஒருவர், 'அவங்க ஏன் ராஜினாமா செய்யணும்... பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் கூட எம்.எல்.ஏ.,க்கள் தானே... அவர்கள் ராஜினாமா செய்து போட்டியிட்டா தெரியாதா...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

'தி.மு.க.,வை தடுத்தீங்களே... அதே மாதிரியா?'



திருப்பூரில் நடந்த இந்திய கம்யூ., மாநில மாநாட்டில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பங்கேற்றார். அவர் பேசுகையில், 'ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்ற கொள்கையுடன், மத்திய அரசு செயல்படுகிறது. அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. சனாதன சக்தி, ஹிந்துத்துவா சக்திகளை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது.'அதற்கேற்ப நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா உட்பட தென் மாநிலங்களில், பா.ஜ.,வை காலுான்ற விட மாட்டோம் என, உறுதி ஏற்க வேண்டும். நாமும், நம் கூட்டணியும், ஒற்றுமை, வீர உணர்வுடன் இருந்தால், பா.ஜ., நுழைவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'எப்படி... நீங்களும், தோழர்களும் ஒற்றுமை, வீர உணர்வுடன் கைகோர்த்து, 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சிஅமைக்க விடாம தடுத்தீங்களே... அப்படியா...?' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


'சத்தமா கோஷம் போடலாம் வாங்க!'


மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே த.மா.கா., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் வாசன் பங்கேற்றார். சாலையின் ஒருபுறம் ஆர்ப்பாட்டம் நடக்க, தடுப்புக்காக போலீசார் 'பேரிகார்டு'கள் அமைத்தனர்.அப்போது, தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்கட்சியின் மாணவரணி மாநில துணை தலைவர் அஸ்வின் சந்தர், தன் ஆதரவாளர்களுடன் பேனரை பிடித்தபடி கோஷமிட்டு, தடுப்பை தாண்டி சாலையின் மறுபுறம் மேடை நோக்கி நடந்தார்.போலீசார் அவர்களை தடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல், தடுப்புக்குள் செல்ல அறிவுறுத்தினர். போலீசாரிடம் பேசியும், சரி கட்ட முடியாததால், வேறு வழியின்றி கடைசியில்
தடுப்புக்குள் வந்தனர்.நிர்வாகி ஒருவர், 'நாம எவ்வளவு பிளான் பண்ணி வந்தோம்... போலீஸ்காரங்க அதுல மண்ண வாரி போட்டுட்டாங்க... சத்தமா கோஷம் போட்டாவது தலைவர் பார்வையை நம்ம பக்கம் திருப்புவோம் வாங்க...' என, முணுமுணுத்தபடி கோஷம் எழுப்பினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement