Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய விளையாட்டின் பொற்காலம் துவக்கம்: பிரதமர்

புதுடில்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் துவங்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Latest Tamil Newsபிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் டில்லியில், நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். விளையாட்டு வீரர்கள், மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.


Latest Tamil Newsவீரர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: உங்களை சந்திப்பதில், நாட்டு மக்களை போல் நானும் பெருமைப்படுகிறேன். அனைவரையும் வரவேற்கிறேன். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், உங்களின் கடின உழைப்பும், சாதனையும் பெருமை அளிக்கிறது.

பதக்கம் வென்றது இளைஞர்களின் சக்தியின் துவக்கம் மட்டுமல்ல. இந்திய விளையாட்டுகளின் பொற்காலம் தற்போது துவங்கி உள்ளது.கடந்த சில வாரங்களில், விளையாட்டு துறையில் இந்தியா இரண்டு சாதனைகளை படைத்துள்ளது. காமன்வெல்த்தில் பதக்கம் பெற்றதுடன், முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா நடத்தி உள்ளது.
Latest Tamil News
செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியில் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி சிறப்பாக செயல்பட்டோம். செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
Latest Tamil Newsகடந்த முறையை விட தற்போது, புதிதாக 4 விளையாட்டுகளில் வெற்றிக்கு வழிவகுத்துள்ளோம். அனைத்து விளையாட்டுகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் திறன் வெளிப்பட்டது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய விளையாட்டுகளில் நமது திறமையை அதிகரிக்க வேண்டும்.
Latest Tamil Newsஇந்தியா தனது மகள்களை கண்டு பெருமை கொள்கிறது. பூஜா கெலாட்டுடன் நான் பேசினேன். உணர்ச்சிப்பூர்வமான அவரது வீடியோவை பார்த்த பிறகு, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என அவரிடம் கூறியுள்ளேன். அவர் நாட்டிற்காக வெற்றி பெற்றவர். அதேநேரத்தில், கடின உழைப்பை எப்போதும் கைவிடக்கூடாது. இவ்வாறு மோடி பேசினார்.


வாசகர் கருத்து (7)

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    .....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    .....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    //////

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    THOUGH NOT A GOLD, IT WAS A PERFECT RESULT FOR TEJASWIN SHANKAR, WHO BATTLED MONTHS OF DRAMA FOR HIS PLACE IN THE INDIAN TEAM FOR THE COMMONWEALTH GAMES. THE US-BASED HIGH JUMPER HAD CLEARED THE ATHLETICS FEDERATION OF INDIA'S (AFI) ENTRY STANDARD FOR CWG 2022 AT A COMPETITION IN THE USA BUT WAS INITIALLY EXCLUDED FROM THE INDIAN SQUAD AS HE DID NOT PARTICIPATE IN INDIA'S NATIONAL INTER-STATE MEET, AS MANDATED. HOWEVER, AFTER TEJASWIN SHANKAR MOVED TO THE COURT CHALLENGING THE DECISION, HE RECEIVED THE GREEN LIGHT FROM AFI TO COMPETE IN BIRMINGHAM. THE DRAMA DID NOT END THERE AS THE ORGANISERS OF THE BIRMINGHAM GAMES INITIALLY REJECTED HIS INCLUSION SINCE HIS NAME WAS SUGGESTED AFTER THE SUBMISSION DEADLINE OF JUNE 29. TEJASWIN SHANKAR WAS FINALLY INCLUDED IN THE TEAM AFTER A MEETING OF THE CHEF DE MISSION CLEARED HIS PLACE AT THE ATHLETES VILLAGE IN BIRMINGHAM FIVE DAYS BEFORE THE ING CEREMONY.

  • அப்புசாமி -

    இதை விட நிறைய பதக்கங்களை இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் வாங்கியிருக்கிறது. ஏதோ இப்பதான் பொற்காலம்னுட்டு....

    • Viswam - Mumbai

      அப்ஸ், கண்ட வாட்ஸாப்ப் மெசேஜ் படிச்சுப்புட்டு கருத்து போடக்கூடாது. துப்பாக்கி சுடுதல் மற்றும் வில் வித்தை போட்டிகள் எல்லாத்தையும் பர்மிங்காம் போட்டியிலே தூக்கிட்டாங்க. இந்த இரண்டு விளையாட்டும் இந்தியாவுக்கு நிறைய பதக்கம் வாங்கி கொடுத்துள்ளது. நாளைக்கே மல்யுத்தம் விளையாட்டை தூக்கினால் மெடல் இன்னுமும் குறையலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்