ADVERTISEMENT
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், சோதியக்குடி, சந்தைப்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 813 குடும்பத்தினருக்கு தல 4800 வீதம் 40 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகையும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசியும் தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர் பேசியதாவது:
வெள்ளநீர் சுழ்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக முதல் கட்டமாக 4800 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தண்ணீர் முழுவதும் வடிந்த பிறகு பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் கணக்கெடுப்பு செய்து அரசின் விதிகளுக்கு உட்பட்டு அதற்கான உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!