Load Image
Advertisement

தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு: பா.ஜ.,வினர் கைது

 தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு: பா.ஜ.,வினர் கைது
ADVERTISEMENT
சென்னை: மதுரை விமான நிலையம் அருகே, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, அவரது உடலுக்கு தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Latest Tamil News
பின்னர், விமான நிலையத்தில் இருந்து கிளம்பி செல்லும் போது தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்திற்கு தியாகராஜன் வந்தார். அண்ணாமலையை வரவேற்க பாஜ.,வினரும் அங்கு வந்திருந்தனர்.

அப்போது அரசு நிகழ்ச்சிக்கு கட்சியினர் குவிந்தது ஏன் என தியாகராஜன் கேள்வி எழுப்பினார். அவர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அவருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவர்கள் விமான நிலைய வாசலில் குவிந்திருந்தனர். அஞ்சலி செலுத்திவிட்டு தியாகராஜன் கிளம்பிய போது, அவர் காரை முற்றுகையிட்டு பா.ஜ.,வினர் போராட்டம் நடத்த முயன்றனர். தொடர்ந்து, கார் மீது செருப்பு வீசப்பட்டது.

5 பேர் கைது



இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குமார், பாலசுப்ரமணி உள்ளிட்ட 5 பா.ஜ., நிர்வாகிகளை கைது செய்தனர்.



வாசகர் கருத்து (99)

  • Visu Iyer - chennai,இந்தியா

    செருப்பு எரிந்தவருக்கு ஷூ வாங்கி கொடுத்தாலும் அவர் செருப்பை தான் போடுவார் என்பது இந்த செருப்பை பார்த்ததுமே தெரிகிறது..

  • Visu Iyer - chennai,இந்தியா

    இந்த எறிந்த செருப்பை என்ன செய்வார்கள்..? யார் இதை வைத்துக் கொள்வார்கள்.? காவல் நிலையத்தில் வைத்து எறிந்தவர் கை ரேகை பதிவை வைத்து விசாரணை செய்ய முடியுமா/

  • Visu Iyer - chennai,இந்தியா

    இத செருப்பு பயன்படுத்தி எத்தனை ஆண்டுகளாக இருக்கும் என்று புலன் ஆய்வு செய்தால், அது யாருடையது என்பது தெரியவராலாம்

  • Visu Iyer - chennai,இந்தியா

    ஒரு செருப்பை வைத்துக் கொண்டு அந்த செருப்பு எறிந்த நபர் என்ன செய்வார்?

  • Visu Iyer - chennai,இந்தியா

    தமிழகத்தின் நவீன பெரியாராக நிதி அமைச்சரை மக்கள் பார்க்கிறார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்