Load Image
dinamalar telegram
Advertisement

21 குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்

Tamil News
ADVERTISEMENT
மதுரை: காஷ்மீரில் ஆக.,11ம் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் இன்று (ஆக.,13) மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.விமான நிலையத்தில் அரசு சார்பில் , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர், அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Latest Tamil Newsபின் அவருடைய உடல் சொந்த ஊர் புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பெற்றோர்கள், கிராம மக்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். பிறகு, லட்சுமணன் சொந்த நிலத்தில் அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி பெற்றோரிடம் வழங்கப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்கி ராணுவம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.


வாசகர் கருத்து (1)

  • ThiaguK - Madurai,இந்தியா

    நாட்டுக்காக உயிர் நீத்த புனிதர் வாழ்க .....பூமி உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும் ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement