Load Image
dinamalar telegram
Advertisement

இலவசம் பற்றி கருத்து கூறுவோர் பற்றி கவலையில்லை: முதல்வர் ஸ்டாலின்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: இலவசத் திட்டம் வேறு சமூக நலத்திட்டம் வேறு என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில், கபாலீஸ்வரர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகையை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது: கல்வி, மருத்துவத்திற்காக செய்யும் உதவிகள் இலவசம் ஆகாது. இலவசத்திட்டங்கள் சமூக நலத்திட்டங்கள் ஆகும். இலவசத் திட்டம் வேறு சமூக நலத்திட்டம் வேறு என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் இலவச திட்டங்கள் அல்ல: அது சமூக நலத்திட்டங்கள் ஆகும்.
Latest Tamil News
கபாலீஸ்வரர் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. இலவசம் பற்றி கருத்து கூறுபவர்கள் பற்றி கவலையில்லை. அனைவருக்கும் எளிய கல்வி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (39)

  • Poochandi - Mumbai,இந்தியா

    கடை தேங்காய் வழி பிள்ளையார் நினைவுக்கு வருது

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இலவசங்கள் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வரமுடியாது. 1967ல் ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கிறது. மக்களை ஏமாற்றுவதே குறிக்கோள். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் இலவசங்களை கொடுத்து நசுக்குகிறார்கள். மீனை கொடுக்காமல் மீன்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் சுயமரியாதை பாதுகாக்கப்படும். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    நல்லது சொன்னால் மனித இனம் ஏற்கும்,

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    பசித்தவனுக்குத் தேவை சாதாரண உணவு,வடை பாயாசம் இல்லை. அந்த சாதாரண உணவை அவன் உழைத்துத்தான் பெற வேண்டும்.உண்டைச் சோறை வாங்கித் தின்றுவிட்டு அவன் கோயில் மாடுபோல் தண்டமாக சுற்றி வருவது ,பிச்சை எடுப்பது போன்றவை சமுக அவலம்.பிச்சைக்காரர் மறுவாழ்வை ஆரம்பித்தவர் கலைஞர்.அதை இலவசம் என்ற பிச்சையால் கொச்சைப்படுத்த வேண்டாமே

  • duruvasar - indraprastham,இந்தியா

    கடப்பா கல்லை லவடுவது இலவசமா ? சமூக நலமா ? இல்லை சமூக நீதியா ? விளக்குங்கள் க அய்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்