ADVERTISEMENT
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளுக்கு, அவரது மகன் அழகிரி அஞ்சலி செலுத்த வராதது ஏன் என்பது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் விசாரித்துள்ளனர்.
இது குறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: ஆக., 7ல் கருணாநிதி நினைவு நாள். ஆண்டுதோறும் இந்நாளில் சென்னை வந்து, அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை, அழகிரி வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவரால் வர முடியவில்லை.அவரது காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு, சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே காரணம். அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சகோதரர் அழகிரியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால், இதை முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. அதனால், சகோதரர் சந்திப்பை ஸ்டாலின் தள்ளி போட்டு விட்டார்.
இருந்தபோதும், தன் சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரை அனுப்பி, அழகிரியிடம் நலம் விசாரிக்க செய்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளுக்காக மதுரைக்கு செல்லும்போது, அழகிரி வீட்டுக்கு வந்து, ஸ்டாலின் நலம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் --
வாசகர் கருத்து (24)
வேறு பயனுள்ள செய்திகளை போடுங்கள்.
காலில் ஏற்பட்ட காயம் அல்ல.மனதில் ஏற்பட்டது. நியாய பிரகாரம் அவர் தான் அரசியல் வாரிசு. கருணாநிதி அவருக்கு செய்த துரோகம் அவரை அப்படி ஆக்கி விட்டது. பாவம்.
நானும் கம்யூனிஸ்ட்டு என்று கூறிக்கொண்டே கம்யூனிஸ்ட்டுகளை ஒதுக்கி வைப்பது போலத்தான் .... ஹிஹி..... நவீன சமத்துவபுரம் இது..... ஹிஹிஹி...
தவறா சொல்லி இருக்கும் செய்தி... அழகிரியை சந்திப்பதற்காக ஒரு அரசு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள் திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளையர்கள் ..... துபாய்க்கு குடும்ப சுற்றுலா சென்றதே அரசு நிகழ்ச்சியாக்க பட்டுதான்.... ஆமாம் அந்த விமான கட்டணத்தை திருட்டு திராவிடம் கழகம் கட்டிவிட்டதா... காட்டினாள் மக்களிடம் ரசீதை காட்ட சொல்லுங்க.....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
என்ன மன கசப்பு . ஸ்டாலின் ஒரு உத்தமர்