Load Image
dinamalar telegram
Advertisement

ஆம்னி பஸ்கள் முறைகேடு; தடுக்க 5 குழுக்கள் அமைப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : ஆம்னி பஸ்கள் முறைகேட்டை தடுக்க, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.சுதந்திர தினம் வரும் 15ம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை. அதேநேரம், இன்றும் நாளையும் சனி, ஞாயிறு அரசு விடுமுறையாக உள்ளது.


இந்த மூன்று நாள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், பலர் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.அதேநேரம், அரசு பஸ்கள், ரயில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், பலர் ஆம்னி பஸ்களுக்கான டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தனர்.அதில், வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, மூன்று மடங்கு அதிகம் என்பதால் அதிர்ச்சி அடைந்தனர்.Latest Tamil News
அதாவது, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, 2,500 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், முக்கிய நகரங்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆம்னி பஸ்களுக்கு வழித்தட உரிமையோ, கட்டணம் நிர்ணயித்து இயக்கும் உரிமையோ வழங்கப்படவில்லை. ஆம்னி பஸ்களுக்கான கட்டண வரையறைக்கு எந்த சட்டமும் இல்லை.சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்லும் வகையில் தான் ஆம்னி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அனைத்து ஆம்னி பஸ்களுக்கும், ஒரே மாதிரியான கட்டணத்தையும் நிர்ணயிக்க முடியாது. காரணம், அவற்றின் இருக்கை, படுக்கை, 'ஏசி' உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையிலும் புறப்படும் நேரம், சேரும் நேரத்தின் அடிப்படையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.ஆன்லைனில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிந்தால், அதை புறக்கணிப்பது தான், ஒரே சிறந்த வழி.


ஆனால், பயணியர் தங்களின் தேவை கருதி, முன்பதிவு செய்வதால் புகார் அளிக்க முன்வருவதில்லை.பயணியர், 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.அதேநேரம், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வரி செலுத்தாத பஸ்களை இயக்குவது உள்ளிட்ட முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 16ம் தேதி காலை வரை, இந்த குழுக்கள் சோதனையில் ஈடுபடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (5)

  • அப்புசாமி -

    காயலாங்கடைக்குப் போகவேண்டிய அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் நாட்டுக்கே கேவலம்.நல்லா மெயிண்டெயின் பண்ணுகிற தனியார் பஸ்கள் அரசுக் கட்டணம் வசூலிக்கணுமாக்கும்? எனக்கு கட்டணம் அதிகமானா தேவையில்லை. பயணம் இனிதாக இருக்கணும். குடுக்க முடியாதவங்க காயலாங்கடை பஸ்களில் செல்லுங்கள். சாக்கடைக்கு பக்கத்தில் ஒரு டீக்கடையில் டீயும் வடையும் சாப்புடுங்க. அரசுத்துறைன்னாலே அழுக்கும், ஆரோக்கியமின்மைதும்தான். ஆனா, அரசியல்வாதிகள் மட்டும் சொகுசா வெள்ளையுஞ் சொள்ளையுமாக வெள்ளை ஏ.சி கார்ல வருவாங்க.

  • jysen - Madurai,இந்தியா

    Kaalai poluthu tamasu news.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஐந்து இல்லை, ஐந்நூறு குழுக்கள் அமைத்தாலும் இந்த அடாவடியை மாற்ற முடியாது நடவடிக்கை என்று போனால் அமைச்சரில் தொடங்கி நிர்வாகிகள், வட்டம், கவுன்சிலர்கள்,……. என்று யாரைப்பிடிப்பது, யாரை விடுவது? மக்களுக்குத் தெரியாதா இந்த கண்துடைப்புக்குழு அழகு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement