Load Image
dinamalar telegram
Advertisement

நாட்டின் சிறந்த முதல்வரில் ஸ்டாலின் 3ம் இடம்: கருத்துக் கணிப்பில் தகவல்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக்கணிப்பை ‛இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில் தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா 63 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 61 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
Latest Tamil Newsஇதேபோல், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களிலும், மற்ற கட்சிகள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு, 53 சதவீதம் பேர் மோடி தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.


வாசகர் கருத்து (136)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    கடைசியில் இருந்து மூன்றாவது இடமா ? ........ நல்லா பாருங்கப்பா ...... அல்லது திறமையற்ற முதல்வர்களில் மூன்றாவது இடமாக இருக்கும் ......

  • ThiaguK - Madurai,இந்தியா

    கடைசிலேர்ந்து பார்த்தா நாங்க தான் நம்பர் ஒன்னு .......எப்ப்ப்பூடி

  • அப்புசாமி -

    எதிர்கால பிரதமர் யோகியாருக்கு எத்தனாவது இடம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்