Load Image
Advertisement

நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை தேவை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

 நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை தேவை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.


மாவட்டத்தில், கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் மூன்று ஆறுகள் மற்றும் 213 ஏரிகள் மற்றும் 72 அணைகட்டுகள் உள்ளன. இந்த இரு அணைகள் மற்றும் ஏரி பாசனத்தை நம்பி 18 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன.மாவட்டம் முழுமைக்குமான விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் இந்த 2 அணைகள் மூலம் கிடைத்து வருகிறது.அத்துடன் குடிநீர் தேவைக்காக ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு சில இடங்களைத் தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேவை பூர்த்தியாகி வருவதால் தற்போது வரை பிரச்னையின்றி போகிறது.ஒவ்வொரு ஆண்டும் என்னதான் மழை அதிகளவில் பெய்தாலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.இதனால், கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறைந்து, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் அல்லப்படும் சூழல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்க உள்ளது. இயற்கையின் கொடையான மழை நீரை ஒரு துளி கூட வீணாக்காமல் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நட வடிக்கை தேவைப்படுகிறது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் நல்ல பலனைத் தந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.இந்த மழைநீர் கேரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வருகின்ற வடகிழக்கு பருவமழை நீரை சேகரிப்பதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர வழி வகுக்கும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement