Load Image
dinamalar telegram
Advertisement

ராகுல் பயணத்துக்கு சென்டிமென்ட் பார்க்கும் காங்கிரஸ்: சுசீந்திரத்தில் இருந்து தொடங்க முடிவு

Tamil News
ADVERTISEMENT
நாகர்கோவில் : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை சென்டிமென்டாக கன்னியாகுமரிக்கு பதில் சுசீந்திரத்தில் இருந்து பயணத்தை தொடங்க காங்., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

காங்., தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் ராகுல் எம்.பி., கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' (பராதமே ஒன்றிணைவோம்) நடை பயணம் அக்., 2ல் காந்தி ஜெயந்தி நாளில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. முன்கூட்டியே செப்., 7 ல் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட எந்த அரசியல் நகர்வுகளும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்ற சென்டிமென்ட் கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல் பயணத்தை சுசீந்திரத்தில் இருந்து தொடங்க காங்.,கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
Latest Tamil News சுசீந்திரத்தில் இருந்து அத்திரி முனிவர் இமயமலை சென்று திரும்பிய போது இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைத்ததாக தலவரலாறு கூறுகிறது. மும்மூர்த்திகள் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் புண்ணிய மண்ணில் இருந்து ராகுல் பயணம் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்று தொண்டர்கள் நம்புகின்றனர்.

இந்த இடங்களை பார்வையிட காங்., தேசிய தலைவர்கள் வேணுகோபால், திக்விஜய்சிங், தினேஷ்குண்டுராவ், தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி, மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இன்று வருகின்றனர்.


வாசகர் கருத்து (21)

  • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

    ஏன் ஜம்மு காஷ்மீர் கௌல் பூணூல் போட்ட பிராமணர் தானே ராகுலும் அங்கு இருந்து தொடங்கலாமே எதுக்கு ஆட்சியை பறிகொடுத்த இடத்தில தொடங்க வேண்டும், தாத்தா பிறந்த பூர்வ பூமி ஜம்மு தானே ??

  • sankaseshan - mumbai,இந்தியா

    எண்ணம் நல்லதாக இருந்தால் எதுவுமே நன்றாக நடக்கும் ஆநால் இத்தாலிய குடும்பம் கெட்ட எண்ணம் உடையவர்கள் யாத்திரை தோற்றுபோகும்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    அப்போ வயநாடு போச்சா?

  • Yogeshananda - Erode,இந்தியா

    எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்குங்க இத்தாலி கொத்தடிமைகளே, இந்த மூன்று மூதேவிகள் காங்கிரஸில் இருந்து போகாத வரை காங்கிரஸ உருப்படவே உருப்படாது

  • Visu - chennai,இந்தியா

    அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்பவரை நம்பி நாட்டின் உயரிய பொறுப்பில் அமர வைக்க துடிப்பதன் ரகசியத்தை காங்கிரஸ் கூறவேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்