Load Image
dinamalar telegram
Advertisement

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலம்: மத்திய உளவுத்துறை உத்தரவு எதிரொலி

கோவை: நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை சர்வதேச விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை, சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி விமானநிலையங்கள், வழிபாட்டுதலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில், பஸ் ஸ்டாண்டுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News


கோவை சர்வதேச விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கின்றனர்.

விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சி.சி.டிவி., கேமராக்களுடன், தற்போது கூடுதலாக கேமராக்களை அமைத்து, விமானநிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.

விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன், மேலும் ஒருமுறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகள் சோதனையிடப்படுகின்றன.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும், பல கட்ட சோதனைக்குப்பின் விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர்.

Latest Tamil News

பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர, விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர, விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

ஆக., 20 வரை பாதுகாப்பு பலம்'



கோவை விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், ''விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக., 20ம் தேதி நள்ளிரவு வரை, இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். தற்போதைய, 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14 மற்றும் 15ம் தேதி வரை தொடரும்,'' என்றார்.



வாசகர் கருத்து (1)

  • Yogeshananda - Erode,இந்தியா

    அங்கே தீவிரவாதிகள் ஜாஸ்தியாக உள்ளார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்