கொசஸ்தலை ஆற்று நீர்வரத்துக்கு முட்டுக்கட்டை: ஆந்திராவில் 2 அணைகள் கட்ட திட்டம்!

பள்ளிப்பட்டில் இருந்து, பூண்டி நோக்கி பாயும் கொசஸ்தலை ஆறு, புண்ணியம் அருகே, ஆந்திர மாநிலத்திற்குள் நுழைகிறது.நகரி தாலுகாவில், சத்திரவாடா, ஏகாம்பரகுப்பம், புதுப்பேட்டை, புக்கை அக்ரஹாரம் வழியாக பாய்ந்து, நல்லாட்டூர் அருகே மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது.
இந்நிலையில், பள்ளிப்பட்டுக்கு முன்னதாக, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட் நகரம் தாலுகாவில், கத்ரேபள்ளி பகுதியில், 97 கோடி ரூபாய் மதிப்பில், 540 ஏக்கர் பரப்பில், புதிய அணை ஒன்று கட்டப்பட உள்ளது.
அதே போல், நகரி அடுத்த, புக்க அக்ரஹாரம் அருகே, 72 கோடி ரூபாய் மதிப்பில், 420 ஏக்கர் பரப்பில், மற்றொரு அணை கட்டப்பட உள்ளது.கொசஸ்தலையின் முன்னதாகவும், குறுக்காகவும், ஆந்திர மாநில பகுதியில், அம்மாநில அரசு, புதிய அணைகள் கட்ட உள்ளது. இதனால், கொசஸ்தலை ஆறு வாயிலாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும்.

நிதிக்கு ஒப்புதல்
கிருஷ்ணாபுரம் அணையில் வழக்கமாக, 500 - 1,000 கன அடி நீர் மட்டுமே மழைக்காலத்தில் ஒரு சில நாட்கள் திறந்து விடப்படும்.இந்த சொற்ப நீரும், இரண்டு அணைகள் கட்டி தடுக்கப்படும் சூழலில், அவற்றை தாண்டி பூண்டிக்கு தண்ணீர் வந்து சேர்வது இனி, கானல் நீர் தான் என, தமிழக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி கோட்ட பொதுப்பணித் துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் மகேஷ்பாபு மற்றும் சுந்தரம் ஆகியோர் நேற்று, நகரி கோட்ட பொதுப்பணித் துறை அலுவலர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்தனர்.
ஆந்திர மாநில பொதுப்பணித் துறையினர் கூறியதாவது:
கொசஸ்தலையில் புதிய அணைகள் கட்டுவது குறித்து, 10 ஆண்டுகளுக்கு முன், திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது.தற்போது அதற்கு அரசு, நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, முறையாக பணிகள் துவங்க மேலும் சில மாதங்கள் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (8)
அவனுக்கு அவன் மக்கள் மீது அக்கறை உள்ளது. அதனால் அணை கட்டுகிறான். கட்டட்டும். இதேபோல் காவேரி குறுக்கே மேகதாது அணையையும் கட்டட்டும். கடந்த 15-20 நாட்களாக காவேரியில் 2 லட்சம் கண அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாது அணை இருந்திருந்தால் அவ்வளவு நீரும் சேமித்திருக்கமுடியும்.
இவங்க. பண்ற அநியாயம் தாங்முடியாம தான் ஆண்டவன் உலகத்தையே அழிக்கிறான்
கடந்த அறுபது வருஷங்களாக ஆண்ட திராவிட மாடல் அரசுகள் எந்த அணையும் கட்டவில்லை. ஜனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பிரச்சினைகளை தீர்க்க, நாம் அடுத்த மாநிலங்கள் மீது துவேஷம் வளர்க்கிறோம். நதி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை ஆந்திராக்காரன் அணை கட்ட கூடாது என்று ஐயகோ வைகோ, ஓசிச்சோறு வீரமணி, குருமா, சைமன் ஆகியோர் கூக்குரல் இடுவர்.
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அண்டை மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணை கட்டுவது என்பது தான் சரித்திரம். எனவே இது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நன்றி தெரிவித்து கடிதம் கூட எழுதுவார்கள். தமிழர்களின் தன்மானம் உலக பிரசித்தி பெற்றதே
திமுகவுக்கு லஞ்சம் கொடுத்தால் , அணைகள் என்ன , ஆளையே [டாஸ்மாக் தமிழனை ]கடத்தி காசு பார்க்கலாம் ......லஞ்சம் மட்டுமே முக்கியம் ..மாநிலம் எக்கேடுகெட்டு போனாலும் கவலை இல்லை ......