Load Image
Advertisement

கோவையில் நள்ளிரவில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 கோவையில் நள்ளிரவில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADVERTISEMENT
கோவை : கோவை - அவிநாசி சாலையில் பாலத்தின் துாண்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை கண்டித்து, பா.ஜ.,வினர், நேற்று நள்ளிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை - அவிநாசி சாலையில், 10.3 கி.மீ., தொலைவுக்கு, மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 300க்கும் மேற்பட்ட துாண்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில், அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.


கூட்டத்தில், பொது இடங்கள் மற்றும் துாண் களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை, 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 10 நாட்களுக்கு மேலாகியும், போஸ்டர்கள் அகற்றப்படாததை கண்டித்து, கோவை மாவட்ட பா.ஜ., வினர், 300க்கும் மேற்பட்டோர், நேற்றிரவு 10:00 மணி முதல், ஜென்னி கிளப் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை மாவட்ட போலீசார், இவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், பாலத்தின் துாணில் தி.மு.க., சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து, அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


போஸ்டர்களை கிழித்த, 40க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை கைது செய்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இவர்களிடம் நள்ளிரவு கடந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், ஹோப் காலேஜ் பகுதியில் கிழிக் கப்பட்ட போஸ்டர்களை ஒட்டும் பணியில் தி.மு.க., வினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து (2)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    பிஜேபி சூழ்ச்சி மற்றும் பின்புற வாசல் வழியாக வருவது எல்லாம் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

  • N Sasikumar Yadhav -

    தீயமுக மற்றும் அராஜகம் இரண்டும் உடன்பிறப்புகள் இணைபிரியா தோழர்கள் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement