Load Image
Advertisement

ஆக்கிரமிப்பால் குறுகிய ரோடு: போக்குவரத்து நெரிசல்

உடுமலை:முக்கிய ரோடுகள் அனைத்தும், ஆக்கிரமிப்புகளால், குறுகலாகியும், கண்டுகொள்ளாத அரசுத்துறைகளால், நகரம் தீராத நெரிசலில், பாதித்து வருகிறது.உடுமலை நகரம், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது. நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான ரோடுகள், அமைந்துள்ளன.இந்த ரோடுகளில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல், நிரந்தர ஆக்கிரமிப்புகளாக மாறியுள்ளன.பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி., வீதி, கச்சேரி வீதி, பசுபதி வீதி உட்பட முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.நெரிசலைக்கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீஸ் சார்பில், 'பார்க்கிங்' இடத்தை வரையறுக்கும் திட்டமும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால், முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது, சரக்கு வாகனங்களை அனைத்து நேரங்களிலும் அனுமதிப்பது போன்ற காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் அதிகரிக்கிறது.நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ராஜேந்திரா ரோட்டில், மட்டும், பிரச்னைகள் அதிகரிக்கும் போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.நகரிலுள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிற ரோடுகளில், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஒருங்கிணைப்பு தேவை
பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை; பை-பாஸ் ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறையும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பிற வீதிகளில், நகராட்சியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலை குறைக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல கூட வழியில்லாத அளவுக்கு நெரிசல் நிலவும் வ.உ.சி., வீதி, கச்சேரி வீதி, கல்பனா ரோடு ஆகிய பகுதிகளில், தற்காலிக மற்றும் நிரந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து ரோடுகளிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், நெரிசல் சற்று குறைந்தது. தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் பழைய நிலையே நகரம் முழுவதும் காணப்படுகிறது.உடுமலை நகரில், பல்வேறு வணிக கட்டடங்கள் 'பார்க்கிங்' வசதிகளை ஏற்படுத்தாமல், செயல்பட்டு வருகின்றன. அவ்வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள், ரோட்டோரங்களை 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி பயன்படுத்துகின்றனர்.இந்த அவலமும் நகர ரோடுகளில் நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. விதிமுறைகளின்படி கட்டடங்கள் கட்டப்படுவது மற்றும் இதர புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement