Load Image
dinamalar telegram
Advertisement

இலவச திட்டமும் சமூக நலத்திட்டமும் வெவ்வேறு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இலவச திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

பா.ஜ., செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மனுவை நீதிபதி ரமணா அமர்வு விசாரித்தது.
Latest Tamil Newsநீதிபதி கூறியதாவது:இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசு சில திட்டங்களை வைத்துள்ளது. இதை கொடுங்கள், அதை கொடுங்கள், இதைக் கொடுக்க வேண்டாம். அதை கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டால் அது எப்படி நடைமுறைக்கு வரும்?. பார்லி., வரம்புகளில் தலையிட விரும்பவில்லை. பிற நாடுகளை பார்த்து பொருளாதார ஒழுங்கை பின்பற்ற வேண்டியுள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (15)

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  பள்ளிக்குப் பணம் கட்ட ,படிக்கும் பையனுக்கு உதவித்தொகை வழங்கினால் அது சமூக நலம்.பெண்ணின் திருமணத்திற்கு தங்க தாலி கொடுப்பது சமூக நலம் இல்லை.ஏழை பெண்ணாய் இருந்தால் திருமணத்தின்போது வெறும் மஞ்சள் கயிற்றைக் கட்டினால் போதுமானது.திருமணத்தைப் பதிவு செய்வதுதான் முக்கியம்.

 • venugopal s -

  நல்லவேளை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்காவது இலவசங்களுக்கும், சமூகநல திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து தீர்ப்பளித்துள்ளனரே, அதுவரை சந்தோஷம்.

 • Raja - Coimbatore,இந்தியா

  உத்தர பிரதேஷத்தில் பிஜேபி கொடுத்தா அது சமூக நலத்திட்டம். திராவிட கட்சிகள் தமிழகத்தில் கொடுத்தால் அது இலவசம். இவ்வளவு தான் வித்தியாசம். இதுக்கு போய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குழம்பினால் எப்படி.

  • Mohan - COIMBATORE,இந்தியா

   என்ன குடுத்தாங்க....பெண்களுக்கு இலவசம் பஸ்ல ...நம்ம ஊர்ல அந்த பஸ் எங்காவது வருதா நேரத்துக்கு ...சரி அந்த பஸ் நிலைமை வெறும் தகர டப்பா ...மலை வந்த ஒழுகுது , நடத்துனர் , ஓட்டுனருக்கு சம்பளம் குடுக்குறாங்களா , படி பணம் ஒழுங்கா குடுக்க இருக்கா ...போக்குவரத்து துறை நல்லா லாபத்துல ஓடி அதுல இலவசம் குடுத்து யார் வேண்டாம்னு சொல்றா..இதுக்கு எதுக்கு இலவசம்...ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு...அந்த பஸ்ல ஏர போன நம்ம மேல எதிருவங்க போல அத்துணை காண்டுல இருகாங்க

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நீதித்துறையும் அரசியல் கட்சிகளின் அதிகாரத்தில் வருவதால் இதற்க்கு மேல் அவர்களால் எதுவுமே செய்யமுடியாது, எல்லா நிலைகளிலும் சேஷன் போன்றவர்கள் ஒருவராவது ஒருமுறை வந்தால் மட்டுமே அவரவர்களுக்கு அவரவர்களின் அதிகார அளவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து செயல்படுவார்கள், சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை யாருமே தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை அறியாமலேயே அரசியல் கட்சிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்தார்கள் சேஷன்?? அதே போன்று நீதித்துறையும் தானாக முன்வந்து ஒரு நாள் இருநாள் தனிமையில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் சற்று சிந்தித்து திருவாய் மொழிந்தால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் நாடு முழுவதும் காஷ்மீர் போல் ஒவ்வொரு குறுநில மன்னர்களின் குடும்ப சொத்தாகும், இப்போதே இஹடியா என்ற பெயரை உச்சரிக்கக்கூட தயங்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டனர், இதே நிலை நீடித்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து. முதலில் அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் என்பதை எல்லோருமே உணரவேண்டும், இன்றைய நிலையில் அரசு ஊழியர்கள் ஏதோ மக்களுக்கு பிச்சைபோடுவது போல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது, அதே போன்று அரசியல் கட்சிகளுக்கு வரி கட்டுபவர்கள் அடிமையாக வாழவேண்டிய ஒரு நிலை, இதனால் இன்று எல்லோருமே படிப்பதை விட்டு விட்டு , வேலைக்கு செல்லாமல் அரசியலுக்கு வருவதிலேயே கவனம் செலுத்தும் அளவுக்கு இளைஞர்கள் நிலையை மாற்றிவிட்டனர். நாம் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம் என்ற எண்ணமும் இல்லை, மனப்பக்குவமும் இல்லை, மாறாக சமுதாயத்தில் ஒற்றுமையின்மையை வளர்க்கிறார்கள், ஜாதி மற்றும் மொழி வெறியைத் தூண்டி சீர்குலைத்து. தாங்கள் வாழ்ந்துகொண்டு, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இவர்கள் மற்றும் இவர்களது குடும்பங்கள் வாழ்ந்து , வளர்ந்து கொண்டு செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது, இந்த போக்கை தடுத்து மக்களுக்காக மட்டுமே அரசு மற்றும் அரசு இயந்திரம் என்பதை நீத்துறை முதலில் நிரூபித்து காட்டி மக்களைக்காப்பற்ற வேண்டிய நிலை வந்துவிட்டது. எங்கெல்லாம் நீதி வழங்கப்பட்டதோ அங்கெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு நடந்து கொண்டு இருக்கிறது, அப்படி என்றால் பல ஆண்டுகள் நீதிக்காக போராடியவர்கள், அவர்களுக்காக அரசு செலவு செய்த நீதியரசர்கள் சம்பளம், வாகன ஓட்டிகளின் சம்பளம், நீதித்துறையில் பணியாற்றியவர்கள் சம்பளம், நீதியைப் பெறுவதைக்காக தன் உயிரை பணயம் வைத்து வாதாடி வெற்றிபெற்ற மாமனிதருக்கு என்ன மரியாதை இருக்கிறது, மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடி விரயமானது வீண்தானே ? உதாரணத்துக்கு ட்ராபிக் ராமசாமி அவர் தொடர்ந்த வழக்குகள், இன்றைய நிலை? முன்பு இருந்ததை விட அதிக அளவில் நடைபாதைக்கு கடைகள், அரசு செய்வதோ இவர்களுக்காக வாகனங்கள் செல்லும் ரோட்டை தடுத்து நடைபாதைகளை அகலப்படுத்தி கடை வைக்க ஊக்குவிக்கிறது. நுங்கம்பாக்கம் முதல் மஹாலிங்கபுரம் பாண்டிபஜார் வந்து பாருங்கள் உண்மை நிலவரம் எப்படி இருக்கிறது என்று . இதே நிலைதான் அனுமதி இல்லாத ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள், வியாபாரங்கள் இப்படி இருக்க தவறு செய்பவர்களுக்கு எல்லா நிலைகளிலும் பாதுகாப்பும் வசதியும் செய்து கொடுக்கட்டப்புக்கொண்டே வந்தால் நேர்மையாக வாழ்பவர்களின் நிலை, இதற்காகத்தான் நீதித்துறையின் கதவுகளை தட்டுகிறோம், எப்படி இருந்தாலும் உங்களுக்கு வாழ்நாள் பென்சன் பாதுகாப்பு இருக்கத்தான் போகிறது, மன்னிக்கவும் மிகப்பெரிய பதவியில் இருப்பவருக்கு இணையாக அனைத்தையும் அனுபவிக்கும் நீத்துறை குறிப்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காவிடில் ... அந்த நிலை வரவேண்டாம், காப்பாற்ற முன்வாருங்கள் . அன்பாக அறிவுரை கூறினால் திருந்தும் நிலை தாண்டிவிட்டது . சற்று கடினமாக நடந்து கொண்டு மக்களைக் காப்பாற்றவேண்டும், வந்தே மாதரம்

 • Dharmavaan - Chennai,இந்தியா

  அத்தியாவசிய தேவை வேறு கிரைண்டர் மிக்சி வேறு அதுவும் தேர்தல் ராகில் கொடுப்பது லஞ்சம்,சொல்லிவிட்டு ஏமாற்றுவது கிருமினல் குற்றம். ஒட்டு வாங்க செய்யும் திருட்டுத்தனம்.இதை தடுப்பது கோர்ட்டின் அவசியம்.நழுவக்கூடாது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்