ADVERTISEMENT
சூரிய மின் பலகைகள், சொந்த வீட்டுக்காரர்களுக்கானது. வாடகை வீட்டுக்காரர்களுக்கு சோலார் பேனலை மாட்ட அனுமதி கிடைக்காது. அதுவும், சூரிய மின்பலகைகளை ஒரு வல்லுனர் வந்து தான் மாட்டித்தர வேண்டும்.
இந்த நிலையை மாற்ற நினைக்கிறது பெர்லினைச் சேர்ந்த 'வீ டூ சோலார்!' வாடகை அபார்ட்மென்ட்களில் குடியிருப்போர், தங்கள் பால்கனி கைப்பிடிகளில், தாங்களாகவே மாட்டிக்கொள்ளும்படி மிக எளிமையான, எடை குறைவான சூரிய மின் பலகைகளை வீ டூ சோலார் தயாரித்து ஜெர்மனியில் விற்பனை செய்து வருகிறது.
ஒரு வீட்டுக்கு எட்டு பலகைகள் வீதம் மாட்டினால், 600 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். இது, ஆண்டுக்கு நடுத்தர வீட்டு உபயோகத்தில் 25 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும். இதனால் 600 கிலோ கார்பன்- டை - ஆக்சைடு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக வீ டூ சோலார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!