Load Image
dinamalar telegram
Advertisement

சிவகளை அகழாய்வு: முதல்முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிப்பு

Tamil News
ADVERTISEMENT
சிவகளை: தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.
Latest Tamil Newsஇதற்காக தற்போது வரை 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.Latest Tamil News
இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 செ.மீ நீளமும், 16 செ.மீ அகலமும், 5 செ.மீ உயரமும் உள்ளது. இந்த நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. மேலும் அந்த தங்கத்தில் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது. ஆய்வில் தங்கம் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Latest Tamil Newsமுதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப்பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தினங்களுக்கு முன்பு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில், இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கத்தினால் ஆன நெற்றிப்பட்டையம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (3)

  • N Sasikumar Yadhav -

    அந்த தங்க தகடில் இது ஈவே ராமசாமி நாயக்கனின் மண் என எழுதியிருப்பதாக தீயமுக உடன்பிறப்புகள் புரளி கிளப்புவார்கள் உஷாராக இருங்கள்

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    இந்த தகவல் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருக்கு தெரியுமா

  • ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்

    இந்த வகை பொக்கிஷங்களை காப்பாற்றி வையுங்கள், கழக அரசியல்வாதிகளின் கண்ணில் பட்டால் போதும் திருடி விடுவார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்