Load Image
dinamalar telegram
Advertisement

ரேஷன் கடைகளில் தரமான அரிசி; அமைச்சர் பெரியசாமி தகவல்

Tamil News
ADVERTISEMENT

அவனியாபுரம் : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.
Latest Tamil News
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வரவுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டு இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

  • Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்

    ஆமாம். மது, போதை பொருளில் வராதாதால், அரசு மது கடைகளை அதிகரிக்க உற்சாக படுத்துகிறது.

  • ram - mayiladuthurai,இந்தியா

    உங்கள் கொத்தடிமைகள் ஆர் எஸ் பி மீடியா இருக்கும் வரை தைரியமாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்

  • SUBBU,MADURAI -

    பெரியசாமி அண்ணாச்சி தரமான அரிசி தருவதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ரெடியா இருங்க சீக்கிரம் டெல்லியில் जेल போறதுக்கு. வரிசைப்படி ED யோட அடுத்த அலேக் நீங்கதான்.

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    சும்மா புளுகாதீங்க ஏட்டய்யா... உங்க அரிசியை கடத்தி கொண்டு போய் நல்லா பாலிஸ் பண்ணிதான் நாங்களே விக்குறோம் அப்படின்னு அரிசி கடத்தல்காரர்கள் சொல்வது அமைச்சர் காதில் விழவில்லை போல. அப்படியே தரமான அரிசி போட்டாலும் கடத்தல்காரர்களுக்குதான் வேலை மிச்சம். மக்கள் எப்போது சென்று கேட்டாலும் அரிசில்லை அல்லது கடை அடைந்திருக்கிறது. இல்லை பணியாளர் விடுமுறை என்ற பதில்தான் வருகிறது. கூடுவாஞ்சேரியில்தான் இந்த அவலம் நடக்கிறது. கடை நம்பர் 03DB016PN. பணியாளர் அவர் நினைத்தால்தான் கடைக்கு வருவார். நினைத்ததைதான் விற்பனை செய்வார். பொதுமக்கள் தினமும் அலைந்ததுதான் மிச்சம்.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Intha maatham ration arisi vaanki unkalukku anuppukiren samaithu saappittu sollunkal

Advertisement