Load Image
dinamalar telegram
Advertisement

போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர் : ஒப்பந்தம் ரத்து

வேலுார்:வேலுாரில், போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்து கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார்.
Latest Tamil News

வேலுார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் பைக் மீதும், வேலுார் சாய்நாதபுரத்தில் ஜீப் மீதும் சாலை அமைத்த விவகாரத்தில் மாநகராட்சி துணை பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Latest Tamil News
இந்நிலையில், வேலுார் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் மக்கள் பயன்பாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 300 அடி போர்வெல் மற்றும் அடி பம்ப் மீதுகடந்த 5 ம் தேதி ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் என்பவர் மக்கள் எதிர்ப்பை மீறி கால்வாய் அமைத்துள்ளார்.

தகவல் அறிந்த மேயர் சுஜாதா பரிந்துரைபடி ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பிளாக் லிஸ்டில் வைத்து கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார். அந்த பகுதி துணை பொறியாளர் செல்வராஜிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல வேலுார் சலவன்பேட்டை இளங்கோ தெருவில் 8 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வந்த 200 அடி ஆழமுள்ள போர்வெல் மீது சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் கோவர்த்தனன் என்பவர் கடந்த 7 ம் தேதி கால்வாய் அமைத்துள்ளனர்.
இதனால் போர்வெல்லை காணவில்லை என வேலுார் மாவட்ட பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டப் பணிகளை மேயர் சுஜாதா ஆய்வு செய்தார்.


வாசகர் கருத்து (13)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் என்ன 'காமடி' ஏதேனும் பண்ணுகிறார்களா? சமீபத்தில்தான் 'பைக்' மீதுசாலை அமைத்தார்கள் பிறகு 'ஜீப் மீதும் சாலை அமைத்தார்கள் இப்போது என்னடா என்றால் ' போர்வெல்' மீது தகுந்த நடவடிக்கை எடுத்து இனிமேலும் இதுபோன்ற 'காமடி' நடக்காமல் தடுக்க வேண்டும்.

  • raja - Cotonou,பெனின்

    கேடுகெட்ட விடியாமூஞ்சி ஓங்கோல் கொள்ளையன் ஆட்சியில் எதுவேனாலும் நடக்கும்....

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    புதுமையை புகுத்தும் (மோட்டார் சைக்கிளுடன் சிமெண்ட் சாலை, ஜீப்புடன் தார் சாலை, போர்வெல் மீது கால்வாய்,.....) இவர்களை பாராட்டவில்லையென்றாலும், பரிகாசிக்கக் கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement