சென்னை போரூரைச் சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் (ஆக.,08)இரவு, சொந்த காரில் அய்யப்பன்தாங்கலில் இருந்து கொளுத்துவாஞ்சேரிக்கு சென்றார்; காரை டிரைவர் ஓட்டினார். அந்த காரை வழி மறித்த மர்ம கும்பல், கத்தி முனையில் கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. பின், காரில் அமர்ந்திருந்த பெண்ணை, காரோடு கடத்திச் சென்றது. பின், கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் வைத்து, அந்த பெண்ணை கத்தி முனையில், நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.அதே போல், அப்பெண்ணின் 8 சவரன் நகையை அக்கும்பல் பறித்து தப்பியது.
பாதுகாப்பு இல்லை
அய்யப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி பகுதியில், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரால், அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ரவுடிகளாக வலம் வரும் கஞ்சா போதை ஆசாமிகள், இரவு வேளைகளில், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குழந்தைகள், பெண்கள் என, அனைவரும் இரவு வேளைகளில், வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.
- பகுதி மக்கள், கொளுத்துவாஞ்சேரி.
வாசகர் கருத்து (19)
ஜாலி சைக்கிள் ரைடிங்க் ஆபீஸர் எங்கேங்கோ?
இன்னும் வெட்கம் இல்லாமல் எப்படி தான் ஆட்சியில் இருக்காங்களோ .
இதுதான் ராமசாமி,அண்ணா, கருணாநிதி வழி திராவிட மாடல் விடியல். இன்னும் மூணரை ஆண்டுகளுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
போதை பொருட்களை கடத்தும், விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து, தண்டனை தரும் தார்மீகஅதிகாரம் தமிழக அரசுக்கு உண்டா? அரசே மது விற்கும்போது அடுத்தவனை குறை சொல்ல அரசுக்கு அதிகாரம் உண்டா?
ஓட்டுப்போட்டு திமுகவை தேர்ந்தெடுத்த மக்கள் பொறுப்பற்றவர்கள் ....... படித்தவர்களுக்கும், வருமான வரி கட்டுபவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்கிற நிலை வரவேண்டும் ........