Load Image
dinamalar telegram
Advertisement

போலீசுக்கு கொலை மிரட்டல்: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Tamil News
ADVERTISEMENT

போலீசுக்கு கொலை மிரட்டல்ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் பரக்கத் வீதியை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் 30, இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக,ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையம் சென்ற நிலையில், அங்கு பணியில் இருந்த காவலர் சிங்கத்துரை மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்வழக்கு பதிவு செய்து, சதாம் உசேனை தேடி வருகின்றார்.

சிறுமியை கடத்திய நபர் மீது வழக்குவிழுப்புரம் : சிறுமியை கடத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி; பிளஸ் 2 முடித்துவிட்டு, கடந்த 4 நாட்களாக ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. விசாரணையில் பிரசாந்த் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், பிரசாந்த் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தந்தையை கொன்று மகன் நாடகம்; போலீசாரிடம் சிக்கியது எப்படி?மைசூரு : குடும்ப தகராறில் தந்தையை கொன்று நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.மைசூரில் உள்ள பிருந்தாவன் காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார், 45; ரியல் எஸ்டேட் தொழிலுடன், அகர்பத்தி வியாபாரம் செய்து வந்தார்.

Latest Tamil News
இவர் நேற்று முன்தினம் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் கொலை செய்யப்பட்டார்.அப்போது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவரது 16 வயது மகன், தன் தந்தையை யாரோ கட்டையால் அடித்து கொன்று விட்டனர் என கூறி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார், உடலை மீட்டு விசாரித்தனர். முதலில் ரியல் எஸ்டேட் விவகாரத்தில், யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். மகனிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார், மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தந்தையை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.போலீசாரிடம் அவர் மேலும் கூறியதாவது:தன் தந்தை தினமும் வீட்டில் தேவையில்லாத காரணத்துக்கு எல்லாம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன் தினமும் தாய் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தன்னிடம் தந்தை தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, மகனை போலீசார் கைது செய்தனர்.

முன் விரோத தகராறில் தாய், மகள் மீது தாக்குதல்அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை அருகே தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தம்பதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலியார்பேட்டை அடுத்த முருங்கப்பாக்கம் கடலுார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி புகழேந்தி, 37.காண்டீபன் இறந்து விட்ட நிலையில், அவரது நண்பரான அவ்வை நகரை சேர்ந்த பாக்கியராஜ் குடும்பத்தினருடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.


இந்நிலையில், பாக்கியராஜின் மனைவி உட்பட குடும்பத்தினர் சேர்ந்து, புகழேந்தி மற்றும் அவரது மகளிடம் தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். வீட்டையும் சூறையாடினர்.புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாக்கியராஜ், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மரத்தில் இருந்துதவறி விழுந்த முதியவர் பலிLatest Tamil News
பாகூர் : தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கன்னியக்கோவில் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; இவர் கடந்த மாதம் 17ம் தேதி வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண்ணை தாக்கிய வழக்கில்'போலி' அரசியல்வாதி கைதுநொய்டா : அரசியல்வாதி என்று கூறி ஏமாற்றி வந்த உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர், பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய உதவியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில், ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் வசித்து வருகிறார்.


தன்னை பா.ஜ., நிர்வாகி என்று கூறி, இவர் பலரை ஏமாற்றியும், மிரட்டியும் வந்துள்ளார். இவருக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ., கூறியுள்ளது.இந்தக் குடியிருப்பில் இவரது வீட்டுக்கு எதிரே உள்ள பொது இடத்தில், மரம் நடும் விவகாரம் தொடர்பாக, ஸ்ரீகாந்த் தியாகிக்கும், அவரது வீட்டருகே வசிக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்தப் பெண்ணை அவர் தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியும் உள்ளார்.இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து, நொய்டா போலீசார் ஸ்ரீகாந்த் தியாகி மீது வழக்கு பதிவு செய்ததும் அவர் தலைமறைவானார். அவர் தன் வீட்டுக்கு வெளியே சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிய பகுதிகளை, 'புல்டோசர்'உதவியுடன் நொய்டா மாநகராட்சி அகற்றியது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மீரட்டில் பதுங்கியிருந்த ஸ்ரீகாந்த் தியாகியை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவருடைய உதவியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே, மாநில அரசின் சின்னத்தை பொருத்தியிருந்ததாக, அவருடைய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியல்வாதி என்று கூறி ஸ்ரீகாந்த் தியாகி பல மோசடிகளில் ஈடுபட்ட தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

காருடன் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்Latest Tamil News
சென்னை : சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே, ஓட்டுனரை தாக்கி விரட்டி, காருடன் பெண்ணை கடத்திச் சென்று, கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேர் கும்பல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரைச் சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, சொந்த காரில் அய்யப்பன்தாங்கலில் இருந்து கொளுத்துவாஞ்சேரிக்கு சென்றார்; காரை டிரைவர் ஓட்டினார்.அந்த காரை வழி மறித்த மர்ம கும்பல், கத்தி முனையில் கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. பின், காரில் அமர்ந்திருந்த பெண்ணை, காரோடு கடத்திச் சென்றது. பின், கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் வைத்து, அந்த பெண்ணை கத்தி முனையில், நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. போலீசார், இது தொடர்பாக, நான்கு பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

சிறுமியை வீடியோ எடுத்தவர் கைதுபெரும்பாக்கம் ; வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர், விஜய், 21. பெட்ரோல் பங்க் ஊழியர். இவர், அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை குளிக்கும்போது 'வீடியோ' எடுத்துள்ளார்.
Latest Tamil News
அதை சிறுமியின் அண்ணனுக்கு, தனக்கு பகிரப்பட்டது எனக்கூறி, 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பியுள்ளார். சிறுமியின் அண்ணன் சந்தேகம் அடைந்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயை அழைத்து விசாரணை செய்தனர். திருட்டுத்தனமாக வீடியோ எடுத்ததை விஜய் ஒப்புக்கொண்டார். அவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் அமர்ந்தவரை கம்பியால் தாக்கியவர் கைதுகொடுங்கையூர் : கொடுங்கையூரில், வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய ஆட்டோ டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை மாத்துார், 3வது மெயின் ரோடு, குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் இளவரசன், 25. இவர், மூலக்கடை, சத்தியவாணி முத்து தெருவிலுள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்கிறார்.

இவர் நேற்று, கம்பெனி அருகில் நின்ற ஆட்டோவில் அமர்ந்தபடி மொபைல்போனில் பேசியுள்ளார். அப்போது, ஆட்டோ உரிமையாளர் சிவகுமார், இளவரசனை ஆட்டோவிலிருந்து இறங்கக் கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதமாகி, சிவகுமார் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியால், இளவரசன் தலையில் தாக்கியுள்ளார்.இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி விசாரித்த கொடுங்கையூர் போலீசார், சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலிக்கு பரிசு மழைவாரி இறைத்த தொழிலதிபர்பூந்தமல்லி : கள்ளக்காதலியின் அழகில் மயங்கிய தொழிலதிபர், பரிசு மழையாக பொழிந்துள்ளார். இதை பயன்படுத்திய அப்பெண், சொகுசு பங்களா வாங்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சேகர், 41. இவர் தாய் மற்றும் சகோதரர் ராஜேஷ், 37, ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இனிப்பு கடை நடத்தி வரும் இவர்கள், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர்.இவர்களது வீட்டில் இருந்த 550 சவரன் நகைகள் மாயமானது. பூந்தமல்லி போலீசாரின் விசாரணையில், சேகர் தன் வீட்டில் இருந்த நகையை கொஞ்சம் கொஞ்சமாக திருடி, வேளச்சேரியைச் சேர்ந்த ஸ்வாதி, 22, என்பவருக்கு கொடுத்தது அம்பலமானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:சேகர் புரோக்கர்கள் வாயிலாக சில பெண்களை தனிமையில் சந்தித்துள்ளார். அந்த வகையில் அறிமுகமானவர் ஸ்வாதி. மாடலிங் செய்து வந்த இவர், பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின் அடிக்கடி ஸ்வாதியை சந்தித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், வீட்டில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து கொடுத்துள்ளார்.

இதையறிந்த சேகரின் பெற்றோர் மீட்டனர். தம்பதி போன்று சுற்றுலா இடங்கள் பலவற்றில் இருவரும் உலா வந்தனர். ஸ்வாதிக்கு இதுவரை, 550 சவரன் நகைகள், 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இருசக்கர வாகனம் மற்றும் கார் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.சொகுசு பங்களா வாங்க திட்டமிட்ட ஸ்வாதிக்கு, 70 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து வந்துள்ளார் சேகர், அதற்குள் இருவரும் சிக்கினர்.இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

உறவினர் வீட்டில் திருடியவர் கைதுமறைமலை நகர் : சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, திருத்தேரியைச் சேர்ந்த சேர்ந்தவர் வெங்கடேசன், 46. இவரும், இவரது மனைவியும் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துாய்மை பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.கடந்த 2ம் தேதி, வேலைக்கு சென்று மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பினர்.


பீரோவில் இருந்த நெக்லஸ், கம்மல், செயின் உள்ளிட்ட 9 சவரன் தங்க நகைகள், 248 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 44 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது.மறைமலை நகர் போலீசார் விசாரணையில், வெங்கடேசனின் உறவினரான ஆப்பரைச் சேர்ந்த மூர்த்தி, 27, என்பவர், கள்ளச்சாவியில் பூட்டுகளை திறந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்து, போலீசார் அவரை கைது செய்தனர். நகை மற்றும் திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.Latest Tamil Newsவாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement