Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை : முதல்வர் ஸ்டாலின் கவலை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் இன்று (ஆக.,10) ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்படுபவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க, நம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகிவிடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

Latest Tamil News
போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை; போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (103)

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    சாராய கொள்முதல நிறுத்திட போறீங்கன்னு பாலு தப்பா நினைச்சி கோபிச்சிக்கப்போறாரு

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இப்படி முதலை கண்ணீர் கவலை எல்லாம் வேண்டாம் தலைவரே. காவல் துறைக்கு அப்படிப்பட்ட போதைப்பொருள் விட்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க நீங்கள் உத்தரவிடவேண்டும். காவல்துறை அப்படி தண்டிக்கும் போது எந்தவொரு அரசியல்வாதிகள் தலையீடும் இருக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  • ram -

    மொத்த வியாபாரிங்களே நீங்கதானே..

  • ... - ,

    முதல்வருக்கு கவலை அளிக்கும் விஷயங்கள்... கஞ்சா விற்பனை யை தடுக்க முடியல... தெருவுக்கு கட்டுமரம் பேர் வைக்க முடியல.... பீச் ல பேனா சிலைய நட்டு வைக்க முடியல.... நீட்ட ரத்து பண்ண முடியல... பெண்களுக்கு 1000 ஓ வா குடுக்க முடியல... பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியல... கூட்டு பலாத்காரத்த அடக்க முடியல... மின்வெட் டூ இல்லாம பண்ண முடியல... இந்த பொழப்பு பொழை முதல்வர் பதவி ஒரு கேடா....

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    யாருக்கும் வெட்கமில்லை

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்