ADVERTISEMENT
பதாங்: சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 'டெல்லி சலோ' என அறைகூவல் விடுத்த பதாங் பகுதி, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் உள்ள பதாங்கில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைந்துள்ளன. இங்கு, 1,800ம் ஆண்டில் இருந்து பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இது குறித்து, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜேஷ் ராய் கூறியதாவது: ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரில் தங்கள் காவல் நிலையத்தை நிறுவியபோது, இந்திய சிப்பாய்கள் முதன்முதலில் தங்கள் முகாம்களை பதாங்கில் தான் நிறுவினர்.

இங்கிருந்து தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஐ.என்.ஏ., எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரிடம் பல உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 1943 ஜூலையில் இங்கிருந்து தான் 'டெல்லி சலோ' என அவர் முழங்கினார். 'ராணி ஆப் ஜான்சி' படைப்பிரிவையும் இங்கு தான் நிறுவினார்.எனவே, அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, 200 ஆண்டுகள் பழமையான பதாங், சிங்கப்பூரில் உள்ள 74 தேசிய நினைவுச் சின்னங்களுடன் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
நாங்க தமிழ்ண்டா. நாங்க ஆஷ் துரைக்கே மணிமண்டபம் கட்டி அழகு பாக்கரவங்க.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஹிஹிஹி.... நேருதானே சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார். இங்குள்ள மத்திய நூலகத்தில் நேரு காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்யும் அளவுக்கு ஆவணங்கள் உண்டு.