Load Image
dinamalar telegram
Advertisement

இருந்த ஒரு நிலத்தையும் தானமாக வழங்கினார் மோடி

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்தின் மதிப்பு, 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அவரிடம் வீடு, நிலம் போன்ற அசையா சொத்து ஏதுமில்லை. தன் பெயரில் இருந்த ஒரே நிலத்தை அவர் தானமாக வழங்கி உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் பிரதமராக பதவியேற்றது முதல், ஆண்டுதோறும் தன் சொத்து விபரங்களை வெளியிட்டு வருகிறார். அனைத்து அமைச்சர்களையும் வெளியிடும்படி கூறியுள்ளார்.இதன்படி, பிரதமர் மோடியின் 2021 - 2022 நிதியாண்டுக்கான சொத்துப் பட்டியல், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Tamil News
இதில் மோடியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு, 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்து, 2.23 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பெரும்பாலானவை வங்கி முதலீடுகள். பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் அவர் முதலீடு செய்யவில்லை. அவருக்கு சொந்தமாக வாகனம் ஏதுமில்லை. அதே நேரத்தில், 1.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு மோதிரங்கள் உள்ளன.

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தை மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, 2002ல் மோடி வாங்கியிருந்தார். அதில், 25 சதவீத பங்கின் மதிப்பு, 1.1 கோடி ரூபாயாகும். தற்போது அந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளதாக, மோடியின் சொத்து மதிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோடியின் அமைச்சரவையில் உள்ள, 29 அமைச்சர்களில், தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.கே. சிங், ஹர்தீப் சிங் பூரி, புருஷோத்தம் ரூபலா, கிஷண் ரெட்டி ஆகியோரும் தங்களுடைய சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் தன் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 2.54 கோடி ரூபாய் அசையும் சொத்து மற்றும் 2.97 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (78)

 • K Govindaraj - Tamilnadu,இந்தியா

  அப்புறம்தான் தெரியும்

 • Tamil - Trichy,இந்தியா

  ஐயோ பாவம்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இந்தாளு நாட்டை கொள்ளையடிக்க மஞ்சப்பையை தூக்கிகிட்டு திருட்டு ரயிலேறி வந்தவன் இல்லையய்யா. அப்பனுக்கு பிறகு நான்தான் வந்து நாற்காலில ஒக்காந்து ஆட்டயப்போடுவேன்னு அடம்பிடிக்கும் ஈனப்பிறவி இல்லையய்யா. சுதந்திரத்துக்கு பிறகு அரசியல் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்த கும்பலை, குடும்பங்களை சுளுக்கு எடுக்க வந்த ஆளு. இந்த தேசத்தை பிடித்த தொழுநோய் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பரம்பரை அரசியல் என்ற பச்சை அயோக்யத்தனத்தை கருவறுக்க வந்தவன்யா. இவன் வேற மாதிரி. ஒரு விவேகானந்தர்தான், ஒரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். அது போலத்தான் தி ஒன் அண்ட் ஒன்லி நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பவர்ஃபுல் பீப்பிள் மேக்ஸ் தி ப்ளேஸ் பவர்ஃபுல்.

 • Senthil Kumar - chennai,இந்தியா

  சும்மா சொல்லக்கூடாது தி மு க இவனுகள நல்ல வச்சி செஞ்சுருக்காங்க ,இவனுக கதறல் பாத தெரியுது .

  • Arunkumar Ramnad - ,

   என்னது திமுக வச்சு செஞ்சுருக்கானுகளா?அடேய் உபி செந்தில் கண்ணு வேர்க்குது தொடச்சுக்கோ🤣

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

   .. உன் பூசை புனஸ்கரங்கள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது...

 • Balaji - Chennai,இந்தியா

  மூன்றாயிரம் கொடிக்குமேல் சொத்தாமே மூன்றாம் கிளீனருக்கு.. நடு கிளீனர் கணக்கே இல்லாம வெச்சிருக்காராமே? இவர்கள் எல்லாம் என்ன தொழில் செய்து இவ்வளவு சம்பாத்தியம் செய்தார்கள்.. சொன்னால் மக்களும் பயனடைவார்கள்.. சொல்லுவார்களா.. சொத்தைக்கொடுக்க வேண்டாம்.. ரகசியத்தை மட்டும் சொல்லுங்கள்.. ஹி ஹி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்