Load Image
dinamalar telegram
Advertisement

அடுத்தடுத்து விடுமுறை வேண்டாம்; கலெக்டருக்கு மாணவி கோரிக்கை

Tamil News
ADVERTISEMENT

வயநாடு : 'அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்' என வயநாடு கலெக்டரிடம் உள்ளூர் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ - மாணவியர் ஜாலியாக கொண்டாடுவர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.


வயநாட்டில் கனமழை காரணமாக வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினமும், நேற்றும், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்ததால், தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. இதையடுத்து, சபூரா நவுஷத் என்ற ஆறாம் வகுப்பு மாணவி, 'இன்றைக்கும் விடுமுறை அறிவித்து விட வேண்டாம்; தொடர்ந்து நான்கு நாட்கள் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது' என மாவட்ட கலெக்டர் கீதாவுக்கு 'இ - மெயில்' அனுப்பினார்.

Latest Tamil News
உடனே அந்த கலெக்டர் மாணவியை வாழ்த்தியதுடன், அந்த மெயிலை தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் பகிர்ந்தார். இந்நிலையில், அந்த மாணவியின் கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (7)

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இந்த பெண்ணுக்கு விடுமுறை தேவை இல்லை என்றால், தான் மட்டும் பள்ளி மெயின் கேட்டின் கீழ் சென்று அமரட்டும்..லீவு வேண்டாம் என்று பொதுவான பினாத்துவதெல்லாம் ரொம்ப ஓவர் ......தேவைப்பட்டவன் விடுமுறை எடுத்துக்கொள்வதில் என்ன மனத்தடை ?? சும்மா வெறும் பந்தாவுக்காக ஒரு கடிதம் .....

  • suresh kumar - Salmiyah,குவைத்

    தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லையாதலால் புதனன்று விடுமுறை வேண்டாமாம்.

  • Girija - Chennai,இந்தியா

    மாணவியின் பெற்றோர்களின் வெத்து விளம்பர மோகம் நம்பும்படியாக இல்லை

  • அப்புசாமி -

    சரியா இங்கிலீஷ் எழுதக் கத்துக்கோம்மா. அது ,continues days அல்ல. continuous days. அனுப்பறதுக்கு முன்னாடி படிச்சுப் பாக்கணும்.

    • raja - Cotonou

      அது ஆறாவது படிக்கும் மாணவி ஆனா திருட்டு திராவிட விடியல் ஆட்சியில் தமிழகத்தின் சமசீர் குப்பையையில் படித்த பட்டதாரி கூட இந்தளவுக்கு ஆங்கிலத்தில் எழுத மாட்டானுவோ அம்புட்டு அறிவா இருக்கானுவோ....

    • Girija - Chennai

      இதுதான் திராவிடர்களின் மட்டமான குணம். குழந்தைகள் மற்றும் கிராமத்து முதியவர்கள் தவறாக ஆங்கிலம் பேசினால் அல்லது வார்த்தையை உச்சரித்தால் சிரிப்பது மட்டம் தட்டுவது என்று. இதனாலேயே சாதாரண பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச பயப்படுகின்றனர், தமிழ் தமிழ் என்று முகமூடி அணிந்து ஒளிந்து கொள்கின்றனர். வெள்ளைக்காரன் தப்பாக தமிழ் பேசினால் வரவேற்பர் மகிழ்வர். படிப்பே இல்லாத நேப்பாளி வாலிபர்கள் தமிழகம் வந்து உணவகங்களில் வேலை செய்பவர்கள் வெட்கப்படாமல் தட்டு தடுமாறி தமிழ் பேச கற்றுக்கொள்கின்றனர் ஆனால் திராவிடர்கள் ?

  • Yogeshananda - Erode,இந்தியா

    நல்ல குழந்தை

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்